மேலும் அறிய

'அவரு சாகல' துரிதமாய் செயல்பட்ட பெண் போலீஸ்! தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய சிங்கப்பெண்!

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கல்லறையில் மயங்கிக்கிடந்த கல்லறை பணியாளரை பெண் காவல் ஆய்வாளர் மீட்டு தனது தோளில் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு 20 செ.மீ. அளவில் பதிவாகிய மழை கடந்த நான்கு தினங்களாக பரவலாக பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதுடன் சூறைக்காற்றும் வீசி வருகிறது.

அவரு சாகல' துரிதமாய் செயல்பட்ட பெண் போலீஸ்! தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய சிங்கப்பெண்!

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் பணியாற்றி வருபவர்  உதயா. இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையிலே பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த உதயாவிற்கு, சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் உடல்நலம் மேலும் மோசமாகியுள்ளது. இந்த நிலையில், கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட உதயா இன்று மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையின் மீதே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்த டி.பி.சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு விரைந்தார். அங்கு உதயாவை சுற்றிலும் முறிந்து விழுந்திருந்த மரங்களின் கிளைகளை அகற்றி, உதயாவை மீட்டார். முழுவதும் மயங்கிக்கிடந்த உதயாவை திரைப்படங்களில் காட்டுவது போல தனது தோளிலே தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் கல்லறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர், உதயாவை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

அவரு சாகல' துரிதமாய் செயல்பட்ட பெண் போலீஸ்! தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய சிங்கப்பெண்!

கல்லறையில் மயங்கிக்கிடந்த கல்லறை ஊழியரை மீட்டு, தோளில் தூக்கிக்கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக, வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் இன்று நண்பகல் வரை சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை மாமல்லபுரம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளதால், மழையின் தீவிரம் இன்று முழுவதும் சென்னையில் அதிகளவிலே காணப்பட உள்ளது.

இதனால், சென்னையில் உள்ள சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை சரிசெய்யும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget