மேலும் அறிய

Kilambakkam Bus Terminus : பக்காவாக ரெடியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. இம்மாதம் இறுதியில் திறக்கப்படுகிறதா ? வெளியான மகிழ்ச்சி தகவல்..

Kilambakkam Bus Terminus : இம்மாதம் இறுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்தை நெரிசலை சரிசெய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.  

Kilambakkam Bus Terminus : பக்காவாக ரெடியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..  இம்மாதம் இறுதியில் திறக்கப்படுகிறதா ? வெளியான மகிழ்ச்சி தகவல்..

பேருந்து நிலையத்தில் வசதிகள் :

 
வரிசை எண் விளக்கம் விபரம்
1 நிலத்தின் மொத்த பரப்பளவு 88,52 ஏக்கர்
2 பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட
நிலம்
59,86 ஏக்கர்
3 பிரதான கட்டிடம் மற்றும் தளங்கள் 2 அடித்தளம் + தரைத்தளம் + முதல்தளம்
4 பிரதான கட்டிடம் கட்டுமான பரப்பளவு 60,034 சதுர மீட்டர்
5 புறநகர் பேருந்து நடைமேடை
எண்ணிக்கை

8 எண்கள் (1,12,150 சதுர அடி )
6 மாநகர் பேருந்து நடைமேடை எண்ணிக்கை 11 எண்கள் (36,200 சதுர அடி
7 புறநகர் பேருந்துகள் எண்ணிக்கை
226 எண்கள்(அரசு பேருந்துகள் =164 + தனியார் பேருந்துகள் =62)
8 பணியில்லா பேருந்து நிறுத்தும் பாந்துகளின் எண்ணிக்கை  144 எண்கள்
9
நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) 
324 எண்கள்
10 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) 2,769
11
மாநகர் பேருந்து அலுவலகம் 
1 எண் (8,265 சதுர அடி) 
12 மாநகர் பேருந்து நிலைய பரப்பளவு 
7.40 ஏக்கர
13 எரிபொருள் நிரப்புமிடம்
2 எண்கள் (0.51 ஏக்கர்)
14
காவலர் அறை மற்றும் கண்கானிப்பு கேமரா அறை
2 எண்கள் (1,230 சதுரஅடி
15  கீழ்தள நீர் தேக்க தொட்டி

13.50 கிலோ லிட்டர்

16 கழிவு நீர் சுத்திகரிப்ப நிலையம் (650
கிலோ லிட்டர்)

1 எண் 5920 சதுர அடி
17 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (300 கிலோ லிட்டர்) 1 எண் (1450 சதுர அடி
18 மின் துணை நிலையம் 1 எண் (8250 சதுர அடி)
19 ஜெனரேட்டர் 2 எண் (500 KVA & 1500 KVA)
20 மின் தூக்கி (6 எண்கள் 20  பயணிகளுக்கு, 2 எண்கள் சர்வீஸ்)  8 எண்கள்
21 பணம் எடுக்கும் இயந்திரம் 1 எண்
22 நேரக்காப்பாளர் அறை 25 எண்கள் (4,640 சதுர அடி )
23 உணவகம் 4 எண்கள் (4,675 சதுர அடி )
24 துரித உணவகம் 2 எண்கள் (3,865 சதுர அடி)
25 கடைகள்  100 எண்கள் (14,810 சதுர அடி) 
26 தாய்ப்பாலுாட்டும் அறை 1 எண் (370 சதுர அடி)
27 அவசர சிகிச்சை மையம்  மற்றும்  மருந்தகம் 2 எண்கள் (785 சதுர அடி)
28 கிடங்கு 2 எண்கள் (970 சதுர அடி)
29 பொருள் பாதுகாப்பு அறை  1 எண் (1230 சதுர அடி) 
30 பயணிகள் தங்குமிடம் 2 எண்கள் (6590 சதுர அடி)
31 பணியாளர் ஓய்வு அறை 4 எண்கள் (13750 சதுர அடி) 
32 தரைத்தள கழிவறைகள் 12 எண்கள் (8130 சதுர அடி) 
33 முதல்தள கழிவறைகள் 12 எண்கள் (13560 சதுர அடி)
34 அலுவலகம் மற்றும் வணிக இடம் 1 எண்கள் (39110 சதுர அடி)
35 மின்அறை  16 எண்கள் (5254 சதுர அடி)
36 கான்கிரீட் சாலைகள் 8514 சதுர அடி
37 புல்தரை 8750 சதுர அடி
38 மழை நீர் சேகரிப்பு தொட்டி 1 எண் (100 கிலோ லிட்டர்)
39 கழிவு நீரேற்று நிலையம் 1 எண் (50 கிலோ லிட்டர்)
40 உயர் கோபுர மின் விளக்கு 13 எண்கள்

சோதனை ஓட்டம்

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு,100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையிலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளே சென்று மீண்டும் பேருந்து நிலையத்தின் பின் வாயில் வழியாக வெளியே வந்து ஊரப்பாக்கம் அருகே ஜிஎஸ்டி சாலையை அடைந்தன. அதேபோல் தென், வட மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் வண்டலூர் பூங்கா அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று பேருந்து நிலையத்தை அடையும் வகையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  


Kilambakkam Bus Terminus : பக்காவாக ரெடியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..  இம்மாதம் இறுதியில் திறக்கப்படுகிறதா ? வெளியான மகிழ்ச்சி தகவல்..

 இம்மாதம் இறுதியில் திறக்கப்படுகிறதா ?

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  வருகின்ற 30-ஆம் தேதி திறப்பு விழா நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  பொங்கல் பண்டிகைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு  கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.


Kilambakkam Bus Terminus : பக்காவாக ரெடியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..  இம்மாதம் இறுதியில் திறக்கப்படுகிறதா ? வெளியான மகிழ்ச்சி தகவல்..

  வழக்கு பிரச்சனை

  மாற்றுத்திறனாளிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்,  முறையான வசதிகள் செய்து தரவில்லை என வழக்கு   நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  அதே போன்று,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  கட்டி முடிக்கப்பட்டதற்கு  பணி நிறைவு சான்றிதழ்  இன்னும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget