Kilambakkam Bus Stand: எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து செல்லும்; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்கும்..? - அமைச்சர் சிவசங்கர்
பெங்களூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கக்கூடிய பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதன் பின்னர் பேருந்து நிலையத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமாக கூறினார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொருத்தவரை, கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயங்கக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும். பெங்களூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கக்கூடிய பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.
தென் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும் நாளை நான்கு மணி அளவில் இருந்து முதல் பேருந்து வரும். அதிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலேயே, நின்றுவிடும். மற்ற பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே செல்லும் அவை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது. நாளையிலிருந்து அனைத்து விரைவு பேருந்துகளும் கிளம்பக்கத்திலிருந்து இயங்கும்.
நாட்களில் 300 புறப்பாடுகளும் வார இறுதி நாட்களில் 360 பொறுப்பாடுகளும் இங்கிருந்து செல்லும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் தென் மாவட்டத்தை நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சார்பில் இயக்கக்கூடிய பேருந்துகள் டிசம்பர் 31 சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை தாண்டி கூடுதலாகவும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிலையத்தில் இருந்து கோயம்பேடும் பகுதிக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என செல்லும். தாம்பரம் பகுதிக்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து, கிண்டி பகுதிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும். 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அவை 4074 நடையாக அவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் அல்லாத விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்து கழகப் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அந்த வழித்தடத்தில் இயங்கும். இந்த நிலை பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் பொங்கலுக்கு பிறகு அந்தப் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மற்ற தமிழ்நாட்டில் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1040 புறப்பாடுகளும் கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளை பொருத்தவரை கோயம்பேட்டில் இருந்து ஏற்கனவே முன்பதிவுகள் நடைபெற்று இருப்பதால் பொங்கல் வரை மட்டுமே அவை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரையாக இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்கப்படும்.
ஏற்கனவே விரைவு பேருந்துகள் பயன்பாட்டில் இருந்து தான் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். எனவே தற்போது விரைவு பேருந்துகள் கிளாம்பாகத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால் அவர்கள் பயணம் செய்த அதற்கு அடுத்த நாள் அவர்களுடைய தொகை மீண்டும் அவர்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதலே கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புக் செய்யப்படும் என தெரிவித்தார்.