மேலும் அறிய
Watch Video | தேர்தலில் நின்றால் ஈனம், மானம் பார்க்கக் கூடாது - திமுகவினருக்கு அமைச்சர் அட்வைஸ்
தொடப்பக்கட்டை தனித்தனி குச்சியாக இருந்தால் பலம் இல்லை, தொடப்பக்கட்டை முழுவதுமாக இருந்தால்தான் பலம் என அறிவுரை
![Watch Video | தேர்தலில் நின்றால் ஈனம், மானம் பார்க்கக் கூடாது - திமுகவினருக்கு அமைச்சர் அட்வைஸ் kanchipuram Urban Local Body Election 2022 Tamilnadu watch video minister Tha.mo.Anbarasan speech Watch Video | தேர்தலில் நின்றால் ஈனம், மானம் பார்க்கக் கூடாது - திமுகவினருக்கு அமைச்சர் அட்வைஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/07/53e429ec8099d6e3e88406ec16e8e134_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நிமிலி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சியின் திமுக சார்பில் போட்டியிடும் 11-வார்டு வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் 1 வேட்பாளர் ஆகிய 15 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்
தேர்தலில் நின்றால் ஈனம் - மானம் பார்க்கக் கூடாது அமைச்சரின் அட்வைஸ் pic.twitter.com/dvCjXuq7vd
— Kishore Ravi (@Kishoreamutha) February 7, 2022
விழாவில் பேசிய அமைச்சர் தேர்தல் என்று வந்துவிட்டால், ஈனம் மானம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும், சொந்தக்காரர்களிடம் சண்டை போட்டிருக்கிறார்கள், அவரிடம் ஓட்டு கேட்காமல் போகக்கூடாது. அவர்களிடமும் ஓட்டு கேட்க வேண்டும் என்றார். அப்போது சில கட்சி நிர்வாகிகள் சிரித்தனர், உடனே அமைச்சர் சீட்டு வாங்கியதால் ஜெயிச்சுட்டு தான் வரணும், என அதட்டல் தோணியில் கூறினார். சண்டை போட்ட சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் கையெழுத்து கும்பிடு, உங்களுக்காக தேர்தலில் வேலை செய்ய வைக்க வேண்டும். அவர் மூலமாக கட்சிக்கு 10 ஓட்டு கிடைக்கலாம், நீங்கள் இவ்வாறு செய்யாமல் விட்டால், உங்களுக்கு எதிராகவும் உங்களுடைய சொந்தக்காரர் வேலையையும் செய்யலாம், அதனால் ஒரு நான்கு ஓட்டுகள் போகும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Urban Local Body Election: வீட்டுக்கு வீடு மரம்... வீடு தேடி சாப்பாடு... யாரு இந்த வேட்பாளர்... நமக்கே பார்க்கணும் போல இருக்கே!
![Watch Video | தேர்தலில் நின்றால் ஈனம், மானம் பார்க்கக் கூடாது - திமுகவினருக்கு அமைச்சர் அட்வைஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/07/fc57654c56abe8624f62d12bfe8f964e_original.jpg)
மேலும் பேசிய அமைச்சர், வார்டுகளில் ஏதாவது பிரச்சினை என்றால் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்களிடம் தெரிவியுங்கள் பிரச்சனையை அவர்கள் தீர்த்து வைப்பார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே பலம், தனித்தனியாக இருந்தால் பலம் இல்லை எனக்கூறி, தொடப்பக்கட்டை தனித்தனி குச்சியாக இருந்தால் பலம் இல்லை, தொடப்பக்கட்டை முழுவதுமாக இருந்தால்தான் பலம் என தெரிவித்தார். 15 வார்டில் ஒரு இடத்தில் கூட அதிமுக வரக்கூடாது. என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion