மேலும் அறிய
Advertisement
Kanchipuram Ther Thiruvizha : " வரதா வரதா" வரம்தா வரதா..! வரதர் கோவில் தேரோட்டம்..! குவிந்த லட்சக்கணக்கான மக்கள்
kanchipuram Vardar ther thiruvizha 2023 : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7-ஆம் நாள்.
முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயர திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி காட்சி அளித்த படி பவனி வரும் வரதராஜ பெருமாள்.
காஞ்சிபுரம் : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தரிசனம் செய்து வந்தனர் அந்த வகையில்
வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது. திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே 3.45 மணி அளவில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ராஜநடையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.
ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர். காந்தி சாலையில் புறப்பட்டு காமராஜர் தெரு 4 ராஜ வீதி சுற்றி மீண்டும் நிலைக்கு வந்து சேரும். மேலும் தேர் திருவிழாவை முன்னிட்டு மிலிட்டரி ரோடு புதிய ரயில்வே நிலையம் பழைய ரயில்வே நிலையம் பெரியார் நகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக நான்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகாசி மாத பிரம்மோற்சவம் ( Vaikasi Brahmotsavam 2023 Dates )
ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் ( kanchipuram varadaraja perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல் ஆகிய விழா நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை. மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்
பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.
9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion