மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் பரிதாபமாக பறிபோன தாய், சேய் உயிர் - பிரசவத்தின் பொழுது அலட்சியமா ?
" நீதி வழங்க வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்"
காஞ்சிபுரத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் (Kanchipuram): காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெரு பகுதியைச் சேர்ந்த உதயராஜ் (25). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி (21) பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் உதயகுமார் ராஜேஸ்வரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ராஜேஸ்வரி கருவுற்றிருந்த நிலையில், சின்ன காஞ்சிபுரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதனை தொடர்ந்து நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக எடை உடன் குழந்தை
நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராஜேஸ்வரிக்கு பிரசவம் பார்த்த நிலையில் திடீரென உடல் நலம் குன்றியதால் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற பிரசவத்தில் அதிக எடை உடன் குழந்தை பிறந்து உள்ளது. இதனை அடுத்து குழந்தை சில மணி நேரங்களிலே உயிரிழந்து உள்ளது. மேலும் ராஜேஸ்வரியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உரிய நீதி வழங்க வேண்டும்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் ராஜேஸ்வரியும், குழந்தையும் உயிரிழந்ததாக கூறி சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உரிய நீதி வழங்க வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியட் சீசர் தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை அலுவலர் பிரியா ராஜிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இது குறித்து புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion