மேலும் அறிய
KANCHIPURAM POWER CUT :- காஞ்சிபுரத்தில் இன்று எந்தெந்த இடங்களில் மின்வெட்டு?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்சாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மின் வினியோகம் தடை
காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் மற்றும் பெருநகர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23- 6 - 21-ஆம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 12 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் ஆதலால் மாகறல், ஆற்பாக்கம், காலூர், கீழ் பெரம்பலூர், வயலூர் ,வெங்கசேரி, புலிவாய், புத்தளி, காவாந்தண்டலம், இளையனார்வேலூர், கம்பராஜபுரம் ,பெருநகர், ஆக்கூர் உக்கல் பெரும்பாக்கம், சேத்துப்பட்டு, கூழமந்தல், மானாமதி கூட்ரோடு, தண்டரை, இளைய நகர் மற்றும் அவற்றைச் சுற்றி உள்ள கிராமங்களில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















