காஞ்சிபுரம் : பாலாற்றில் வெள்ளம்...30 கிராம மக்களே உஷார்..!
"பாலாற்றின் இடது கரை மற்றும் வலது கரையினை ஒட்டி அமைந்துள்ள 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு "
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை தொடர்ந்து , மாண்டஸ் புயல் மற்றும் தொடர்மழை காரணமாக பாலாறு ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து இன்று (12.12.2022) பிற்பகல் 2.00 மணியளவில் வினாடிக்கு 1724 கன அடி உபரி நீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர் மழையின் காரணமாக கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது என பொதுப் பணித் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாற்றின் இடது கரை மற்றும் வலது கரையினை ஒட்டி அமைந்துள்ள, காஞ்சிபுரம் வட்டம், வாலாஜாபாத் வட்டம் மற்றும் உத்திரமேரூர் வட்டத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட கிராமங்களைச் சார்ந்த கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் இடது கரையோர கிராமங்கள்
1. பெரும்பாக்கம்
2. முத்தவேடு
3. பிச்சவாடி
4. விஷார்
5. ஆளவந்தார்மேடு
6. விப்பேடு
7. வெங்கடாபுரம் 8. செவிலிமேடு
9. ஓரிக்கை
10. சின்னகயப்பாக்கம்
11. கோயம்பாக்கம்
12. வில்லிவளம்
13. வெங்குடி
14. வாலாஜாபாத்
15. பழையசீவரம்
வலது கரையோர கிராமங்கள்
1. கோழிவாக்கம்
2. புஞ்சையரசன்தாங்கல்
3. வளத்தோட்டம்
4. குருவிமலை
5. விச்சந்தாங்கல்
6. ஆசூர்
7. அவலூர்
8. அங்கம்பாக்கம் 9. திருமுக்கூடல்
10. பினாயூர்
11. திருமஞ்சேரி
12. சாத்தனஞ்சேரி
13. கலியப்பேட்டை
14. ஒரக்காட்டுப்பேட்டை
15. காவித்தண்டலம்
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய் துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் மூலம் பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இரங்க வேண்டாம் எனவும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி போன்றவற்றை செய்ய கூடாது எனவும், கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வீட்டில் இருக்கும் சிறுவர் சிறுமிகளை ஆற்றில் அருகில் செல்லாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்