மேலும் அறிய
Advertisement
‛டாஸ்மாக் கடையைச் சுற்றி வீடுகளே இல்லை...’ மாவட்ட நிர்வாகத்தின் பொய் அம்பலம்!
குடியிருப்புக்கு மத்தியில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரிய முதல்வர் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அப்பட்டமாக பொய் கூறியது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அதிகம் உள்ளது , அதில் சாத்தான் குட்டை தெரு பகுதியில் அமைந்துள்ள சந்தவெளி அம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு நாளொன்றுக்கு அதிக அளவில் பெண் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். மேலும் இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன .
இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகள் மத்தியில் டாஸ்மார்க் ஒன்று இயங்கி வருகிறது . ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து செல்லும் பாதையில் மது பிரியர்கள் சாலை ஓரமாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். மேலும் குடித்த பாட்டிலை சாலையில் உடைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்லாது குடித்துவிட்டு தெருவோரத்தில் சண்டை சச்சரவில் ஈடுபடுகிறார்கள். மேலும் குடியிருப்பு வாசலில் போதையில் படுத்து உறங்குகிறார்கள், இதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக , என்ற குற்றச்சாட்டை அப்பகுதி பொதுமக்கள் முன் வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அந்த குடியிருப்பு பகுதி மக்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு, ஒன்றை அளித்திருக்கிறார்கள். அதற்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அளித்த பதிலில் சம்பந்தப்பட்ட டாஸ்மார்க் அமைந்துள்ள பகுதியில் எந்த ஒரு குடியிருப்பும் இல்லை என அப்பட்டமாக பொய்யான தகவலை வழங்கி பொதுமக்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது, இருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாது தினசரி அதிகாலையில் இருந்தே அந்த டாஸ்மார்க் வெளியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. சாலையோரத்தில் உள்ள ஆட்டோவில் வைத்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்கிறார்கள் இந்த வியாபாரம் காவல்துறைக்கும் தெரிந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மது விற்பவருக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
மேலும் டாஸ்மாக்கை அகற்றக்கோரி மனு அளித்தவருக்கு டாஸ்மாக்கில் பார் நடத்தும் நபரொருவர் கொலை மிரட்டல், விடுத்திருக்கிறார், தற்போது அந்த ஆடியோ காஞ்சிபுரம் நகரப் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.
அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதால், பள்ளி செல்லும் மாணவர்கள் இவ்வழியாக பள்ளிக்குச் சென்று, வரவேண்டிய சூழல் இருப்பதால், உடனடியாக கடையை மூட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion