மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அப்பாடா எவ்ளோ பெரிய பாம்பு..! மக்களே உஷாரா இருங்க..! காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம்..!
வீட்டின் படுக்கை அறையில் பதுங்கி இருந்த அதிக விஷம் கொண்ட 5 அடி கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
![அப்பாடா எவ்ளோ பெரிய பாம்பு..! மக்களே உஷாரா இருங்க..! காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம்..! kanchipuram highly venomous 5-foot glass viper was caught hiding in the bedroom of the house TNN அப்பாடா எவ்ளோ பெரிய பாம்பு..! மக்களே உஷாரா இருங்க..! காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/24/8dd53035c692b2187483e6c13289f1ba1674538295490109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாம்பை பிடித்தபோது
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு நேதாஜி நகர் பகுதியில் வசிக்கும் ஆண்டாள் என்பவர் வீட்டில் உள்ளே படுக்கை அறையில் மத்தேயு கீழே 5 அடி நீளம் கொண்ட அதிக விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு தங்கி உள்ளது. வீட்டின் உரிமையாளர் ஆண்டாள் சத்தம் கேட்டு கீழே பார்த்தபோது திடீரென்று பாம்பு உரிமையாளரை நெருங்கி வந்தவுடன் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து வீட்டை பூட்டி சென்று அக்க பக்கத்தினர் வீட்டில் பாம்பு உள்ளதாக தெரிவித்தனர்.
அருகாமையில் உள்ளவர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் உள்ளே படுக்கை அறையில் இருந்த 5 அடி நீளம் கொண்ட அதிக விஷம் கொண்ட கண்ணாடிவிரியான் பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். அதிக விஷம் கொண்ட பாம்பு வீட்டில் உள்ளே நுழைந்து தங்கி இருப்பதை கண்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
![அப்பாடா எவ்ளோ பெரிய பாம்பு..! மக்களே உஷாரா இருங்க..! காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/24/e8aed2c11c48d5b5d9a88043999caa231674538321611109_original.jpg)
இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், “இரவில் மட்டுமே அதிக அளவில் காணப்படும் கண்ணாடி விரியின் பாம்பு உணவுக்காக வந்த பொழுது வழி மாறி இந்த வீட்டிற்கு வந்திருக்கலாம், இருந்தும் இவ்வளவு பெரிய பாம்பு சமீப காலங்களில் பார்த்ததில்லை. பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த சில நிமிடங்களில் பாம்பு பிடிக்கப்பட்டு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட உள்ளது” என தெரிவித்தனர்.
இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் நேதாஜி நகர் பகுதியில் சேர்ந்த மக்கள் நம்மிடம் கூறுகையில், “இந்தப் பகுதியில் ஏரி நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக இந்த பகுதியில் இருக்கும் கருவேல முள் பொதாாரில் அதிகளவு பாம்புகள் உள்ளன. அவற்றை சீர் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் கூறுகையில் குழந்தைகள் நடமாடும் நேரத்தில் இந்த பாம்பு வீட்டிற்கு வந்தாலும் நல்வாய்ப்பாக எதுவும் நடைபெறவில்லை, இருந்தும் இதுபோன்று மேலோரும் சம்பவம் நடைபெறாமல் இருக்க எங்களுக்கு அருகில் இருக்கும் ஏரியை சுத்தப்படுத்தி கொடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion