"யாரை நான் குறை சொல்வது " கண்ணீர் விட்டு கதறிய வாயில்லா ஜீவன் - பொதுமக்களை உலுக்கிய சம்பவம்
உயிரிழந்த நான்கு பசு மாடுகளில் ஒரு பசு மாட்டின் கன்று இறந்து போன தன் தாய் பசுவை சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்தது.
தொடரும் சம்பவங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமே பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள்வ்திரிவது தொடர்கதை ஆகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தினர், அவ்வப்பொழுது சிறு சிறு நடவடிக்கைகள் மட்டுமே எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. குறிப்பாக வாகன ஓட்டிகளை மாடுகள் அச்சுறுத்துவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
ஒருபுறம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தாலும் மறுபுறம் மாடுகளும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. அவ்வப்பொழுது ஏற்படும் சாலை விபத்துகளில் மாடுகள் உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்கின்றன. இன்று நடைபெற்ற சம்பவத்தில் கூட நான்கு மாடுகள் உயிரிழந்த, வாயில்லா ஜீவனான மற்றொரு கன்று குட்டி, பாதிப்படைந்துள்ளது. எனவே மாடு வளர்ப்போர் சாலைகளில் மாட்டை விடாமல் இருப்பதும், அவ்வாறு விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தான் இதற்கு ஒரே வழி என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.