மேலும் அறிய
உணவகத்தில் இருந்த 3 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்து..! ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிர்ச்சி சம்பவம்..!
Kanchipuram Fire Accident : உணவகத்தில் வைத்திருந்த மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்து

தீ பற்றி எரியும் சிற்றுண்டி கடை
ஸ்ரீபெரும்புதூர் அருகே உணவகத்தில் வைத்திருந்த மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்து.
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிற்றுண்டி உணவகம் வைத்துள்ளார். இன்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்த பிறகு உணவகத்தில் ஊழியர்களை விட்டுவிட்டு புறப்பட்டு உள்ளார். சிறிது தூரம் சென்ற நிலையில் உணவகத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூன்றும் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்துக்குள்ளானது.

இதனை கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் குடிசை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் கொழுந்து விட்டு எரிந்து வந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து நேரிடும் போது அவழியாக யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பொழுது அருகில் மக்கள் நடமாட்டமோ, கடையில் யாரும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது
இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து காவல்துறையில் தரப்பில் விசாரித்த பொழுது: சந்த வேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த சிற்றுண்டி கடையில் இருந்த சமய எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது .இதனை தொடர்ந்து அடுத்தடுத்த அருகில் இருந்த இரண்டு சிலிண்டர்களும் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறனர் தற்பொழுது தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion