மேலும் அறிய

பாஜகவில் இணைந்த திமுக கவுன்சிலர்; மாநகராட்சி மேயர் மீதான அதிருப்தியில் தாவியதாக பேட்டி!

மேயர் தனது கணவரை சார்ந்து இருப்பதாக, குற்றச்சாட்டை முன் வைக்கிறார் கட்சிமாறிய கயல்விழி .

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது, தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில்,  31 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன, அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. சுயேச்சையாக போட்டியிட்டு 6 நபர்கள் வெற்றி பெற்றனர். சுயேச்சையாக வெற்றி பெற்ற 6 பேரில் 16வது வார்டு உறுப்பினர் எஸ்.கே.பி.சாந்தி சீனிவாசன் மற்றும் 46 வது வார்டு உறுப்பினர் கயல்விழி சூசையப்பர் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த திமுக கவுன்சிலர்; மாநகராட்சி மேயர் மீதான அதிருப்தியில் தாவியதாக பேட்டி!

மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற திமுகவிற்கு உள்ளே நடைபெற்ற போட்டியின் காரணமாக, அப்பொழுது சுயேச்சைகள் உள்ளிட்ட பல கவுன்சிலர்களின் ஆதரவு, திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு தேவைப்பட்டது. இதனடிப்படையில் திமுக தலைமை அறிவித்த, காஞ்சிபுரம் மாநகராட்சியின் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
பாஜகவில் இணைந்த திமுக கவுன்சிலர்; மாநகராட்சி மேயர் மீதான அதிருப்தியில் தாவியதாக பேட்டி!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் 46 வது வார்டு கவுன்சிலர் கயல்விழி சூசையப்பர் பேசுகையில்,  தனது பகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார், மக்கள் தொகை அதிகமுள்ள பின்தங்கிய பகுதியான 46 வது வார்டுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கிவிட்டு, மிகவும் வளர்ச்சியடைந்த எந்த பிரச்சினையும் இல்லாத 48 வது வார்டுக்கு மட்டும் எப்படி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கினீர்கள் என கடும் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
பாஜகவில் இணைந்த திமுக கவுன்சிலர்; மாநகராட்சி மேயர் மீதான அதிருப்தியில் தாவியதாக பேட்டி!
இந்நிலையில் கயல்விழி தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  திமுக கட்சியை சேர்ந்த எஸ்கேபி சீனிவாசனின் மனைவி சாந்தி சீனுவாசன் , சந்துரு , சுரேஷ் , சுசிலா ஆகியோர் வார்டுகளுக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து விட்டு, அதே திமுக கட்சியை சேர்ந்த எனக்கு மட்டும் எப்படி சொற்ப ரூபாய் ஒதுக்கீடு செய்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பி இருந்தேன். இதனால் அதிர்ச்சியுற்ற மேயர் , ஆணையர் , செயல் பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க முடியாமல் சப்பைக்கட்டு கட்டினார்கள்.

பாஜகவில் இணைந்த திமுக கவுன்சிலர்; மாநகராட்சி மேயர் மீதான அதிருப்தியில் தாவியதாக பேட்டி!
முதலில் நான்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் போட்டியிட  மாவட்ட செயலாளரிடம் தொடர்புகொண்டு சீட் கேட்டு இருந்தேன், ஆனால் நான் படித்த பட்டதாரியாக இருப்பதால் நீங்கள் ஜெயித்து வந்தீர்கள் என்றால், கேள்வி கேட்பீர்கள் எனவே உங்களுக்கு சீட் இல்லை என கூறிவிட்டார். நான் முதுகலை பட்டம் பயின்று உள்ளேன். மேலும் என்னுடைய வார்டு மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய வேண்டுமென ஆர்வத்தில் இருந்த காரணத்தினால் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ஆளும் கட்சி ஆதரவுடன் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற எண்ணத்தில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தேன். ஆனால் தற்போது இருக்கும் மேயர் தனது கணவர் கட்டுப்பாட்டில், கணவர் சொல்வதை மட்டுமே கேட்கிறார். மேலும் அவர், சிலரை சார்ந்து உள்ளார். ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனைத்து உதவிகளையும் செய்கிறார் என குற்றம் சாட்டினார்.
 
பாஜகவில் இணைந்த திமுக கவுன்சிலர்; மாநகராட்சி மேயர் மீதான அதிருப்தியில் தாவியதாக பேட்டி!
 என்னுடைய பகுதியில் நீண்ட காலமாக இருக்கும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண ப்படுவது கிடையாது அது குறித்து பேச சென்றாலும் மேயர் நேரடியாகப் பேசுவது கிடையாது. தெருவில் இருக்கும் குப்பையை அகற்ற வேண்டும் என 10 முறை போன் செய்தால், மட்டுமே நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையுமே ஒவ்வொரு நலத்திட்ட பணிகளை மேற்கொள்வதற்கும், சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணமாகவே நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளேன். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் நிச்சயம் என்னுடைய பகுதி மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
 
காஞ்சிபுரம் என்பது எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்டிமென்டாக பார்க்கப்படும் , பகுதியாக இருந்து வரும் நிலையில், திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பாஜகவில் இணைந்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
"பணிந்தது மத்திய அரசு.. என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது" காலரை தூக்கிவிட்ட ஸ்டாலின்!
Embed widget