மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம்: கவுன்சிலர்கள் கமிஷன் கேட்டு தொந்தரவு; போர்கொடி தூக்கும் ஒப்பந்ததாரர்கள்
kanchipuram municipality: காஞ்சிபுரம் மாநகராட்சி அரசு பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் 10% முதல் 20% கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு.
காஞ்சிபுரம் மாநகராட்சி ( kanchipuram municipality )
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்ததை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டு 51 வார்டுகளிலும் கடந்த ஆண்டு மாநகராட்சியின் முதல் தேர்தல் நடைபெற்ற 35 வார்டுகளில் திமுக கவுன்சிலர்களும், 16 மாநகராட்சி வார்டுகளில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிக பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து மாநகராட்சியில் முதல் மேயராக திமுக கவுன்சிலர் மகாலட்சுமி யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆன்லைன் பதிவு மூலம்
51 வார்டுகளில் பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகளை மாதந்தோறும் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு வார்டுகளில் தேவைப்படும் அடிப்படை தேவைகளான புதிய கட்டிடம், அங்கன்வாடி மையம் கட்டிடம், சுகாதார நிலையம் கழிப்பறை, சாலை வசதி, மழை நீர் கால்வாய், கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட ஏராளமான அரசு நிதியிலிருந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனை காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் அரசு பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர்கள் 51 வார்டுகளிலும் அரசு பணிகளை டெண்டர் முறையில் எடுத்து ஆன்லைன் பதிவு மூலம் பதிவு செய்து பணி செய்து வருகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் 10% முதல் 20 %
மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக அரசு பணி செய்து வரும் கட்டிடங்கள் சாலைகள் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தத்திலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் 10% முதல் 20 % வரை கமிஷன் கேட்பதால் ஒப்பந்தம் அடுத்த டெண்டர் பணிகளை செய்ய முடியாமல் அவதிக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.
உடனடியாக நடவடிக்கை
மாநகராட்சி நிர்வாகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் நிர்வாகத்தை அமைப்பது வகையில் சில மாவட்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களும் முன்னேற்ற நல சங்கம் சார்பில் ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை முன் வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion