மேலும் அறிய
Advertisement
'அரசு நிகழ்ச்சிக்கு நீங்களே வரலன்னா, எப்படி? ' எம்.பி, எம்.எல்.ஏ முன்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்த காஞ்சி மாவட்ட ஆட்சியர்
மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் ஊராட்சி தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்திருக்க வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் ஊராட்சி தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் வருவதில்லை என எம்பி எம்எல்ஏ முன்னிலையில் கடும் குற்றச்சாட்டை வைத்த ஆட்சியர்..
பல்துறை சார்ந்த அரங்குகள்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விவசாயிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்துறை சார்ந்த அரங்குகளின் மூலம் நல திட்டத்தை அறிந்து கொள்ள விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் ஏற்பாட்டின் பேரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை மாவட்ட தொழில் மையம், வனத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்துறை அரங்கங்கள் அமைக்கப்பட்டு அரசு திட்டங்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனை தெரிந்து வைத்தனர்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் : அரசு பல லட்சம் ரூபாய் செலவில் ஓரே இடத்தில் அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனை பார்வையிட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 64 கிராம ஊராட்சி தலைவர்கள் முழுவதும் வரவில்லை.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால் முதலில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்து கொண்டு தங்களை சந்திக்க வரும் பொது மக்களுக்கு விளக்கி கூறி அதில் பயனடைய வைக்க வேண்டும். ஆனால் இங்கு குறைந்தபட்சம் 150 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு அமைக்கப்பட்ட அரங்குகளை ஒருவர் கூட பார்க்கவில்லை என்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
எம்எல்ஏ , எம்பிக்களை பார்க்க வந்தவர்கள்
இங்கு வந்திருப்பவர்கள் பாதி பேர் எம். எல். ஏ, எம் .பி களை பார்க்க வந்தவர்கள் என்பதும் தெரிய வருகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எம். எல். ஏ, எம். பி.கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில் ஆட்சியர் கடும் எச்சரிக்கையாகவும், இதனை தெரிவித்ததார். மாவட்ட ஆட்சியரின் இந்த பேச்சுக்கு மேடையில் இருந்த, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion