மேலும் அறிய

வலுப்பெறும் பருவமழை: 100% நிரம்பிய 111 ஏரிகள்.. காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் பட்டியல் இதோ..

Kanchipuram Lake : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவ மழை எதிரொலியாக பல்வேறு ஏரிகள் நிரம்பி உள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக அவ்வப்பொழுது கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் நீர் மட்டும் உயர்ந்து வருகிறது.  பல்வேறு  ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களிலும் நீர் செல்வதால்  சிறிய ஏரிகள் பலவும் வேகமாக நிரம்பி வருகின்றன.  

காஞ்சிபுரம் - பொதுப்பணி துறை

காஞ்சிபுரம், பொதுப்பணி துறை, கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ,திருவண்ணாமலை ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1022 ஏரிகளில், 111 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது,  அதேபோன்று 76 சதவீதத்திலிருந்து 99 சதவீத நீரை எட்டியுள்ள ஏரிகளின் விவரம் 180 ஏரிகளாக உள்ளது.  51% இருந்து 75%  279 ஏரிகள் நிரம்பியுள்ளன  26 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் 299 ஏரிகளும்,  25 சதவீதத்திற்கு 153 ஏரிகளும் நிரம்பியுள்ளன.  1022 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு உள்ளது  முழுமையாக வட்டியை ஏரிகளின் விவரம் பூஜ்ஜியமாகவே உள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஏரிகளிலும் குறைந்தபட்ச நீர் இருப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது

காஞ்சி, செங்கை மாவட்ட ஏரிகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 41 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 58 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 5 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 93 ஏரிகளில் 7 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது

உத்திரமேரூர் ஏரியின் நிலவரம் என்ன ? ( uthiramerur lake )

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக உத்திரமேரூர் ஏரி இருந்து வருகிறது. உத்திரமேரூர் ஏரியின்  மொத்த அடி 20 அடி அதில் 18.50 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவில் 92.50 சதவீதம் தண்ணீர் எட்டி உள்ளது. உத்திரமேரூர் ஏரி 90%க்கு மேல் நிரம்பியுள்ளதால் கடல்போல் காட்சி அளித்து வருகிறது.

கனமழை, மிக கனமழை அபாயம்:
இந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு கனமழை அபாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள பதிவில், 15-ம் தேதி (இன்று) காலை 8.30 மணி வரை புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழை அபாயம் உள்ள மாவட்டங்களில் சாலைகள் வழுக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் பாதிப்பு, தண்ணீர் தேக்கம், நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரிப்பு உள்ளிட்டவை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் மழை அபாயம் இருப்பதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget