மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குபட்டு என்ற கிராமத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராட்சியில், பழங்கற்கால் மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஒரகடம் அடுத்த வடக்குபட்டு கிராமப் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜூலை 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இப்பகுதியில் பழங்கால  சிலை ஒன்று  இருந்து வந்த நிலையில், இந்த அகழ்வாராய்ச்சியானது தொடங்கப்பட்டது. குறிப்பாக 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து, சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாய்வு பணியில்  குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
 
பழங்கால கட்டிடம்
 
முதற்கட்டமாக தோண்டும் பணியானது நடைபெற்றது அப்பொழுது சிறிது தூரத்திலேயே, பழங்கால கட்டிட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிட அமைப்பானது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறினர். குறிப்பாக அந்த கட்டிடம் ஆனது, பழைய கற்களைப் பயன்படுத்தி ( reused stone ) கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
 
மேலும் அதனை சுற்றி பள்ளம் தோண்டியபோது பல அரிய பொருட்கள் கிடைக்கப்பட்டன.
 
  • பழங்கால கல் மணிகள் கண்ணாடி மணி
  •  எலும்பு 
  • செம்பு காசு 
  • பானையோடுகள்
  • கண்ணாடி பொருட்கள்
 
உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இவை பல்லவர் காலம் , அதற்கு முந்தைய காலத்தை சேர்ந்த பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
மற்றொரு பகுதியில் தொடர்ந்த ஆய்வு
 
இந்நிலையில், மற்றொரு மேடான பகுதியில் அகழாய்வு பணி துவங்கியது. இந்த இடத்தில் மிக அரிய பொருட்கள் கிடைத்தன. 
 
  • கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள்.
  • வண்ணம் பூசிய பானை ஓடுகள்
  • குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள்  (அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன )
  •  ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள்.
  • ரவுலட்டட் ஓடுகளும்
 
இதுதவிர கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் காதணிகள், சுடுமண் வட்ட சில்லுகள், இரும்பு பொருட்கள் மற்றும் வளையல் துண்டுகள் போன்ற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆய்வின்பொழுது இதே போன்ற மண்பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
 
தங்க அணிகலன்
 
இதே பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 0.82 கிராம் எடையுள்ள இரண்டு தங்க அணிகலன்கள் கிடைத்தன. இவை இரண்டும் அணிகலனாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது . ஆனால் எந்த மாதிரியான, அணிகலன் என்பது குறித்த ஆய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், முத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த முத்திரை எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது, இது யாருடைய முத்திரை என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
 
காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
 
பழங்கற்கால கருவிகள்
 
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட, பழைய கற்கால கருவிகள் ஆகியவை கிடைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில், நடத்தப்பட்ட அகழ்வாராட்சியில், முதல் பாதையில், வரலாறு துவக்க காலத்தில் பயன்படுத்த பொருட்கள் கிடைத்தன. அதற்கு கீழே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுது பழங்கற்கால கருவிகள் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
 
பழங்கற்கால கருவிகளான, அச்சுகள், ஸ்கிராப்பர்கள், பிளவுகள் மற்றும் பயன்படுத்தும் கருவிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பகுதியில் சிறிய இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1000 முதல் 1200 கற்கருவி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சிரியத்தை  ஏற்படுத்தியுள்ளது. பழங்கற்கால கருவிகளை வைத்த பார்க்கும் பொழுது இந்தப்பகுதியில் குறைந்தபட்சம் 12,000 முதல் ஒன்றரை லட்சம் ஆண்டுகள் முன்பு வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்திரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆய்வின்பொழுது, இதேபோன்று கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
 
தொடர்ச்சியாக வாழ்ந்த மனிதர்கள்
 
ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறுகையில், தொடர்ச்சியாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவது, இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பொழுது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்படும். ஆனால், அதற்கு மாறாக இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின்படி, தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் மனிதர் வாழ்ந்ததற்கான தடயம் உள்ளது. தற்பொழுது கூட அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகிலேயே பொதுமக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தனர்.
 
காஞ்சிபுரத்தில் கிடைத்த தங்கம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகால பொக்கிஷம்...!
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நடைபெற்று வருவது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது துவங்கப்பட்ட அகழ்வாராட்சியில் அதிக அளவு பொருட்கள் கிடைக்கப்பட்டு இருப்பது ஆய்வாளர்கள் இடையே ஆர்வத்தை தூண்டி உள்ளதாகவே இருக்கிறது. தொடர்ந்து இது போன்ற அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget