மேலும் அறிய
Kanchipuram: காஞ்சிபுரத்தில் சோகம்... மின் கசிவால் பற்றி எரிந்த குடிசை...! நடந்தது என்ன?
” காஞ்சிபுரம் பகுதியில் மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது "

தீ விபத்து
மின் கசிவு காரணமாக தீப்பற்றி குடிசை வீடு முற்றிலுமாக இருந்து நாசம், சேமிப்பு வைத்திருந்த 50,000 ரொக்கம் தீயில் எரிந்தது.
காஞ்சிபுரம் (Kancipuram News): காஞ்சிபுரம் அடுத்த மகரால் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி மணிமாறன். இவரின் மனைவி கலா குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல், வேலைக்கு சென்று இருந்தார் மணிமாறன். மாலை நேரத்தில் குடிசை வீட்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் தீ மளமளவென பரவி குடிசை முழுவதும் பற்றி எரிந்து நாசமானது.
குடிசை பற்றி எரிவதை கண்ட பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்து உத்தரமேரூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பற்றி எரியும் தீயை தண்ணீரை பிழிச்சி அடுத்து அணைத்தனர். தீயை அணைப்பதற்குள் குடிசை வீடு முழுவதும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. குடிசை வீடு எரிந்து நாசமானதில் கூலி வேலை செய்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. மேலும் வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் இந்த தீ விபத்தில் சிக்கி கருகியதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாகறல் பகுதியில் குடிசை வீடு எரிந்து, நாசமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















