மேலும் அறிய

" நா. முத்துக்குமார் விளையாடி மகிழ்ந்த காஞ்சிபுரம்": புத்தக கண்காட்சியில் புகழாரம்...!

காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவிற்கான விளம்பரத்தில் காஞ்சியை சேர்ந்த பாடல் ஆசிரியர் நா.முத்துகுமாரை முன்னிலைப்படுத்தியது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் காஞ்சி புத்தகத் திருவிழா 2022 நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் புத்தகத் திருவிழா குறித்த விளம்பர பதாகைகள் மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பும் வகையில் குறும்படம் ஆகியவை வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. சங்க காலம் தொட்டு தமிழை வளர்த்த காஞ்சிபுரத்திலும்,  பல்லவர் சோழ மன்னர்கள் காலங்களில் கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்கும் கைலாசநாதர் கோயில் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரநாதர் கோயில் என திருத்தலங்களும் உலக புகழ் பெற்ற அத்திவரதர் வைபவம் நடைபெற்ற காஞ்சி குறித்த காணொளியும் , அதே நேரத்தில் சினிமா திரைப்படங்களில் புதிய முத்திரை பதித்த காஞ்சி மாநகரின் புகழ் பெற்ற எழுத்தாளர் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த விளையாடிய காஞ்சியில் , உலகப் புகழ் பெற்ற பட்டு நகரம் தொழிற்சாலை நகரம் என பல்புகழ் கொண்ட காஞ்சி மாநகரில் புத்தகத் திருவிழா நடைபெறுவதாகவும் இந்த காணொளியில் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசுகையில் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெறவுள்ள காஞ்சி புத்தகத் திருவிழா 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் , இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் சிந்திக்க தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மனதை மயக்கும் கலை நிகழ்ச்சிகள் குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் என பல வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரியான முறையில் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நடத்திட அனைவரும் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். விளம்பர பதாகைகள் காணொளி காட்சிகள் ஆகியவற்றை வெளியிட சாதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி , மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி , மகளிர் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த குறும்படத்தில் காஞ்சிபுரம் பிரபல திரைப்பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமாரை முன்னிறுத்திய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget