மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கி அடைப்பை நீக்கும் அவலம்
சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அலுவலக கட்டிடத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வந்தது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து உள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தொடர்ந்து கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வந்தது.
இதனால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது என தடை உள்ள போதும் வங்கி நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கி அடைப்பை நீக்கும் பணியை செய்து உள்ளது. இதனை அவ்வழியே சென்றவர்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion