மேலும் அறிய
Advertisement
இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் - பின்னணியில் சுவாரசிய தகவல்கள்
நாடு முழுவதும் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக (PICO)செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது
இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து பிப்ரவரி 19-ம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ-ISRO) முன்னாள் விஞ்ஞானியும், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் (ஐ.எஸ்.ஏ.சி.-(ISAC)) மற்றும் இந்திய ரிமோட் சென்சிங் மற்றும் சிறிய ரக, அறிவியல் மற்றும் மாணவர்களுக்கான செயற்கைகோள்கள் (IRS&SSS) திட்ட இயக்குநருமான ஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாணவர்களால் சவுண்ட் ராக்கெட் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. மேலும் வெவ்வேறு பே லோட்களை கொண்ட சிறிய ரக 150 செயற்கைக்கோள்களும் தயாரிக்கப்பட்டன. இத்துடன் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் மறு பயன்பாட்டு ராக்கெட் (reusable rocket) தயாரிக்கப்பட்டுள்ளது. இதர மாணவர்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கினர். சவுண்ட் ராக்கெட்டில் இருந்து ஏவப்படும் இந்த செயற்கைக்கோள்களில் இருந்து வானிலைமற்றும் வளிமண்டல நிலை மற்றும் கதிர்வீச்சு தன்மை குறித்து ஆராய்ச்சி தகவல்களை பெற முடியும்.
இந்தியா முழுவதும் இருந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 3500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டும் கிடைக்கும் அரிய வாய்ப்பில் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மீனவ சமூகத்தைச் சேர்ந்த 200 மாணவர்களும், இந்தியா முழுவதும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 60 பழங்குடியின மாணவர்களும் அடங்குவர்.மும்பை மாநகராட்சி 20 மாணவர்களையும், நாக்பூர் மாநகராட்சி 10 மாணவர்களையும் அளித்தன. மேலும், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பற்றியும் கற்றுக் கொண்டனர்.
தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் ஏவும் திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக, மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தை வெகுவாகப் பாராட்டினார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி Dr மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், "செயற்கைக்கோள் சார்ந்த தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவ சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேவேளையில் முதலாவது ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் விண்ணில் ஏவியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமித்த கருத்து கொண்டவர்களின் கனவு இந்த சாதனையை நிஜமாக்கி உள்ளது. உலக அரங்கில் இந்தியா விண்வெளி அறிவியலில் வேகமாக முன்னேறி வரும் நாடாக உள்ளது. எனவே, ஆர்வமிக்க துடிப்புமிக்க இளைஞர்கள் இந்த துறைக்கு அதிகளவில் வர வேண்டும்" என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion