மேலும் அறிய
Advertisement
சென்னை கனமழையில் விபத்து : உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டுக்கள்
மழையில் அடிபட்ட இளைஞர், காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்த காவலர்கள், குவியும் பாராட்டுக்கள்
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( வட ஆந்திரா - ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
மழையில் அடிபட்ட இளைஞர், காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்த காவலர், குவியும் பாராட்டுக்கள் pic.twitter.com/wpKgHhkLBs
— Kishore Ravi (@Kishoreamutha) May 10, 2022
நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான சூழலுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையின் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதேபோல் நேற்று நள்ளிரவு சென்னையின் புறநகர்ப் பகுதியான தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வந்தது அப்பொழுது, குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் மேம்பாலம் அருகே இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு துடித்துக் கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக சென்ற ரோந்து காவல்துறையினர்உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் ஆம்புலன்ஸ் வருவதற்கு சற்று காலதாமதம் ஆகும் என ஆம்புலன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக அவர் அடிபட்டு மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈடுபட்டதை பார்த்த காவலர் ராஜு என்பவர் உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில், அடிபட்டு போராடிக்கொண்டிருந்த இளைஞரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளார். சிறப்புப் பிரிவு காவலராக பணியாற்றி வரும் ராஜு மற்றும் போக்குவரத்து காவலர் பாலச்சந்திரன் உடனடியாக கொண்டு சென்ற மருத்துவமனையில் சேர்த்ததால், தற்போது இளைஞர் ஆபத்து நிலையிலிருந்து கடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மழை காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில், தக்க நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு காவலர் தனது வாகனத்திலேயே கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion