மேலும் அறிய

Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி. இவர் அவ்வப்போது அரசியல், பிரபலங்கள் குறித்து கருத்து கூறுவது வழக்கம். அந்த வகையில் இவர் தெலுங்கர்கள் குறித்து கூறிய கருத்து பெரும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டார். 

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:

இந்த நிலையில், சென்னை எழும்பூர் போலீஸார் நடிகை கஸ்தூரி மீது கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு, இழிவுப்படுத்துவோர் மீது நடிவடிக்கை எடுக்க தனிச் சட்டம் கொண்டு வரவேன்உன் என்ற கோரிக்கையுடன் நவம்பர் 4-ம் தேதி ஆர்பாட்டம் நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில், அவர் அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தெலுங்கர்கள் பற்றிய தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் அதை திரும்ப பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இங்கு, தெலுங்கு பேசுபவர்களாக உள்ளவர்கள், மன்னர்களின் அந்தப்புரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என கூறியதற்கு பலர் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. 

தி.மு.க.வினர் மீது குற்றச்சாட்டு:

கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதையடுத்து, கஸ்தூரி அவருடைய கருத்திற்கு உடனே கஸ்தூரி விளக்கம் அளித்தார்.  "தமிழர்களிடையே பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை செய்து மோசடியில் ஈடுபடும் திராவிட புலம்பெயர்ந்த ஏமாளிகளின் இரட்டை நிலைப்பாட்டை நேற்று அம்பலப்படுத்தினேன்.

தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிரானவர் என என்னை பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வதன் மூலம் திமுகவினர் என்னை சீண்ட முயல்கின்றனர். தெலுங்கர்களுக்கு எதிராக நான் பேசியதாக போலியான செய்திகளை அவர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்" என குறிப்பிட்டிருந்தார். வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். பிராமணர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம். தனிப்பட்ட தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் கடந்து போகிறேன்" என்றார்.

சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பிராமண சமூகத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாக கூறி, அதை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலித் சமுதாய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை போன்று பிராமண சமுதாய மக்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!
அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!
Rasipalan Today: மேஷத்திற்கு திறமை வெளிப்படும்; ரிஷபத்திற்கு மகிழ்ச்சியான நாள்: இன்றைய ( 18-01-2025 ) ராசி பலன்.!
மேஷத்திற்கு திறமை வெளிப்படும்; ரிஷபத்திற்கு மகிழ்ச்சியான நாள்: இன்றைய ( 18-01-2025 ) ராசி பலன்.!
OTT Release: சூது கவ்வும் 2 முதல் அலங்கு வரை! வீக் எண்டில் OTT--யில் பார்க்க இத்தனை படங்கள் ரிலீசா?
OTT Release: சூது கவ்வும் 2 முதல் அலங்கு வரை! வீக் எண்டில் OTT--யில் பார்க்க இத்தனை படங்கள் ரிலீசா?
Embed widget