மேலும் அறிய

இடி விழுந்து சேதமடைந்த காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு திருக்குடமுழுக்கு...!

’’காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் மீது கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இடி விழுந்ததால் சேதம்’’

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் மீது கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இடி விழுந்ததில் நாசி தலைப்பகுதி சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருக்கோவில் தெற்கு ராஜகோபுரம் சிதிலமடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு இன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

இடி விழுந்து சேதமடைந்த காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு திருக்குடமுழுக்கு...!
 
கோபுர குடமுழுக்கையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை கும்பகோணம் கே.தினகர் சர்மா தலைமையில் தொடங்கின. அன்றைய தினம் கோ பூஜை யாகசாலை மண்டப பூஜை மூலமந்திர ஜப ஹோமம் ஆகியன நடைபெற்றன. திங்கட்கிழமை மகா பூர்ணாஹூதி நடைபெற்று புனிதநீர் குடங்கள் கோவிலின் தெற்கு ராஜகோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இடி விழுந்து சேதமடைந்த காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு திருக்குடமுழுக்கு...!
 
இந்த குடமுழுக்கு விழாவில் திருக்கோவில் ஸ்ரீ காரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி மேலாளர் என் சுந்தரேசன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஜெயராமன், கோயில் நிர்வாக அலுவலர் தியாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர்கள் குமரன், வெள்ளைச்சாமி ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
 
காஞ்சி காமாட்சி வரலாறு
 
 காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.

இடி விழுந்து சேதமடைந்த காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு திருக்குடமுழுக்கு...!

அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள்.

இடி விழுந்து சேதமடைந்த காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு திருக்குடமுழுக்கு...!
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.

பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.

இடி விழுந்து சேதமடைந்த காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு திருக்குடமுழுக்கு...!
 
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி தேதி, வழிமுறைகள் என்ன?
Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி தேதி, வழிமுறைகள் என்ன?
திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் செல்போன் வீடியோ !! வில்லன் யார் தெரியுமா ?
திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் செல்போன் வீடியோ !! வில்லன் யார் தெரியுமா ?
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை: 45 நாட்களுக்கு தினமும் 44 ரயில்கள் ரத்து! பேருந்து வசதி இருக்குமா?
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை: 45 நாட்களுக்கு தினமும் 44 ரயில்கள் ரத்து! பேருந்து வசதி இருக்குமா?
சென்னை ; தண்டையார்பேட்டை போலீசார் அதிரடி !! வலி நிவாரணி மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர் !!
சென்னை ; தண்டையார்பேட்டை போலீசார் அதிரடி !! வலி நிவாரணி மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர் !!
ABP Premium

வீடியோ

Kapil Dev supports Imran Khan | இம்ரான் கானுக்காக ஓடிவந்த கவாஸ்கர், கபில் தேவ் பாக்., அரசுக்கு கோரிக்கை
Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
America Iran War: ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
Royal Enfield Continental GT 650: அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
eVitara vs Windsor: இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
Embed widget