Chennai Traffic Police : ‘சென்னை மக்களே ஹெல்மெட் போடாமல் போறீங்களா?’ உங்களை போலீஸ் போட்டோ எடுத்தாலே போதும், அபராதம் வீடு தேடி வரும்..!
’இனி சென்னையில் போலீசார் இல்லையென்று நினைத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செல்ல முடியாது. அப்படி சென்றாலும் அபராதம் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது’
![Chennai Traffic Police : ‘சென்னை மக்களே ஹெல்மெட் போடாமல் போறீங்களா?’ உங்களை போலீஸ் போட்டோ எடுத்தாலே போதும், அபராதம் வீடு தேடி வரும்..! In Chennai, if you don't wear a helmet, you will be fined in a new way by cell phone, Chennai traffic police action Chennai Traffic Police : ‘சென்னை மக்களே ஹெல்மெட் போடாமல் போறீங்களா?’ உங்களை போலீஸ் போட்டோ எடுத்தாலே போதும், அபராதம் வீடு தேடி வரும்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/a054e38b2e1441b7ccc0e008baaa5fbc1679895506949108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை இனி போலீசார் மறித்து பிடித்து அபராதம் விதிக்க வேண்டியதில்லை. அவர்களை தங்களது செல்போனில் புகைப்படம் மட்டுமே எடுத்து அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையை சென்னை போக்குவரத்து போலீசார் அமல்படுத்தியுள்ளனர்.
செல்போனில் படம் எடுத்தால் போதும், அபராதம் வீடு தேடி வரும்
இருசக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறை போக்குவரத்து விதிகளை மீறும்போது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சிலர் போக்குவரத்து போலீசாருக்கே போக்கு காட்டிவிட்டு தப்பிச் சென்று விடுகின்றனர். அதோடு, ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்தி, அபராதம் கட்டச் சொன்னால், எனக்கு ஐஜி-யை தெரியும் அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால், பல்வேறு பிரச்னைகளை போலீசார் அணுதினமும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்ற, சங்கடங்களை தவிர்க்க சென்னை போலீசார் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம், விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்பவர்களை போலீசார் மடக்கிப் பிடித்துதான் அபராதம் விதிக்க வேண்டியது என்பது இல்லை. அவர்களை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தாலே போதுமானது. அதன்மூலம், தொடர்புடைய வாகன ஓட்டிக்கு அபராதத் தொகையானது அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் சோதனை முயற்சி தற்போது சென்னையில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சென்னையில் இந்த செல்போன் செயலி மூலம் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) March 26, 2023
சிக்னலில் கேமரா – இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
போக்குவரத்து போலீசார் இல்லாத நேரங்களில், போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யும் விதமாக சென்னையில் உள்ள 186 சிக்னல்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சிக்னலை மதிக்காமல் கடந்து செல்லுதல், தவறான திசையில் செல்லுதல் உள்ளிட்ட 7 விதிமுறை மீறலுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
#helmet #motorcycle #bikelife #biker #ride #bike #NoHonking #DoNotDrinkAndDrive #NeverOffDuty #InPublicService #YourSafetyOurPriority pic.twitter.com/FiVxz1tE0z
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) March 25, 2023
விதி மீறல்களை குறைக்க நடவடிக்கை
பெருமளவு வாகன பெருக்கம் நிறைந்த நகரமான சென்னையில் விபத்துகளை தடுக்கவும் விதிகளை மீறுவோரை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிக்னல்களில் சிசிடிவி, செல்போனில் படம் என தற்போது தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
அதோடு, போக்குவரத்து போலீசார் எதிர்கொள்ளும் சிரமங்களும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. சிக்னல்களில் நின்று மட்டுமே அவற்றை இயக்க முடியும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் அருகே எங்கிருந்து வேண்டுமானலும் சிக்னல்களை இயக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டு அவை வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)