மேலும் அறிய
Advertisement
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
களைகட்டும் உள்ளாட்சித் தேர்தல், மீண்டும் அக்னி கலசம் பிரச்சினை, கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ...
1. திருவண்ணாமலை அருகே நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் இருந்த வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் பாமகவினர் போராட்டம்
2. அரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், விழுப்புரத்தில் ஒரே பள்ளியில் படித்த 8 மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது. விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மொகசினா பானு, இலக்கியா, கோமலவள்ளி, விஜயலட்சுமி, சுவேதா, சாருலதா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
3 . நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடப் பங்கீடு பேச்சு முடியும் முன்பே, அதிமுக, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
4. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் விழுக்கம் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை மற்றும் விஷ்ணு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. தமிழக அரசின் 'நீட்' தேர்வு பயிற்சியால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 32 மாணவியர் உட்பட, 41 அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
6. சென்னை ஏகாட்டுரில் குடிபோதையில் மனைவியை கணவன் கத்தியால் தாக்கியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
7. சென்னை எண்ணூரில் கடலில் குளித்த 7 சிறுவர்கள் அலையில் சிக்கி 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்
8. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
9. நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் பாமக சாா்பில் போட்டியிட உள்ள வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியலை கட்சித் தலைவா் ஜி.கே.மணி சென்னையில் வெளியிட்டாா். முதற் கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 187 வார்டுகளுக்கு வேட்பாளரை அறிவித்தார்.
10. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,வா கனங்களில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, 13.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion