மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு... வட மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள்..
கூட்டுறவு கடன் முறைகேடு, சூடு பிடித்த நகர மன்ற தேர்தல், நடிகர் பரோட்டா சூரி வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ..
1. அதிமுக ஆட்சியின்போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக நகை மற்றும் பயிர்க்கடன் வழங்கியது தொடர்பாக, காசாளரை சஸ்பெண்ட் செய்து, கூட்டுறவு கடன் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்
2. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
3. காஞ்சிபுரம் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
4. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு நிறைவு.156 பதவிகளுக்கு போட்டியிட 1001 நபர்கள் வேட்புமனு தாக்கல்.ஒரே நாளில் 451 நபர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல்.
5.செங்கல்பட்டில் மகளிர் சுய உதவி குழு நபர்களுக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது
6. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2016 நபர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
7. முன்னாள் டிஜிபியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீதான பண மோசடி வழக்கு விசாரணையை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8. சமீபத்தில் கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட தி.மு.க., வட்டச் செயலர் மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
9. சென்னை ஏலச்சீட்டு நடத்தி, 43.26 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணுக்கு, எழும்பூர் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
10. ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், 26வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திருமுல்லைவாயல், ஜெயா நகர் நரிக்குறவ காலனியை சேர்ந்த, நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர், சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion