மேலும் அறிய

மனிதனை மையப்படுத்திய AI மையம்.. ஐஐடி மெட்ராஸின் சூப்பர் முயற்சி!

தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் ‘மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது.

‘மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள மனித ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது.

தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவுவது உள்ளிட்டவை இந்த மையத்தின் செயல்பாடுகளில் அடங்கும்.

ஐஐடி மெட்ராஸின் சூப்பர் முயற்சி:

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் முக்கிய விஷயமாகும். கட்டுப்பாடுகளுக்கும் புதுமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.

உச்சநீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம் (சன்சத் டிவி வழியாக), இந்திய ராணுவம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டப் பணிகளில் இந்த மையம் பணியாற்றி வருகிறது.

மையத்தின் நோக்கங்கள் என்ன?

தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் AVSM, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம்.ஜே.சங்கர் ராமன், CHAI தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கவுரவ் ரெய்னா மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இதர தொடர்புடையோர் முன்னிலையில் இந்த மையம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மையத்தின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “மனித மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இறுதிப் பயனர்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உள்ளதாகவே தெரிகிறது.

செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் பல்வேறு அம்சங்களை, குறிப்பாக விளக்கத்திறன், பொறுப்புக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கவனிக்கும் விதத்தில் CHAI-ன் பணிகள் அமைந்திருக்கும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த மையத்தின் நோக்கம் மூன்று பரிமாணங்களை மையமாகக் கொண்டிருக்கும். மனித ஆற்றலை மேம்படுத்துதல், மக்களைப் பாதுகாத்தல், கலாச்சாரம்- பாரம்பரியத்தின் மூலம் பொதிந்துள்ள சமூக மதிப்பைப் பெருக்குதல்.

நாடு முழுவதும் உள்ள மாணாக்கர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் மற்றும் தீர்வுகளில் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையம் வாய்ப்பாக அமையும். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மாணவ-மாணவிகள் தங்களின் இளங்கலை, முதுகலை, பிஎச்டி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போன்றவைகளை இம்மையத்தின் வழிகாட்டுதலுடன் தொடரலாம். செயற்கை நுண்ணறிவில் திறமை படைத்தவர்களுக்கு தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: மெட்ரோவில் சென்ற விஜய்... முத்தம் கொடுத்து தோளில் சாய்ந்து கொண்ட பெண் - நெகிழ்ச்சி வீடியோவை பாருங்க
CM Vijay: மெட்ரோவில் சென்ற விஜய்... முத்தம் கொடுத்து தோளில் சாய்ந்து கொண்ட பெண் - நெகிழ்ச்சி வீடியோவை பாருங்க
Gateway of Chennai: ஹைதராபாத், பெங்களூருவை மிஞ்சப்போகும் சென்னை! சென்னையின் 'கேட்வே' மாஸ்டர் பிளான்! என்ன சிறப்பு?
Gateway of Chennai: ஹைதராபாத், பெங்களூருவை மிஞ்சப்போகும் சென்னை! சென்னையின் 'கேட்வே' மாஸ்டர் பிளான்! என்ன சிறப்பு?
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget