மேலும் அறிய

Nilekani Centre-IIT Madras: இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி-யில் நீலகேனி மையம் தொடக்கம்!

Nilekani Centre-IIT Madras: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Technology Madras (IIT Madras)  இந்திய மொழித் தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தும்  நோக்கில், நீலகேனி மையத்தை (Nilekani Centre) திறக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Technology Madras (IIT Madras)  இந்திய மொழித் தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தும்  நோக்கில், நீலகேனி மையத்தை (Nilekani Centre) திறக்கப்பட்டுள்ளது. 

ஐஐடி சென்னையில் ரோஹினி மற்றும் நந்தன் நீலேகனி ஆகியோர் நீலேகனி தொண்டு நிறுவனம் மூலம் இம்மையத்திற்கு தாராள நிதியுதவியாக ரூ.36 கோடி வழங்கியுள்ளனர்.

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மூலம் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் புதிய மையம் செயல்படும். ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  நந்தன் நீலேகனி இந்த மையத்தைத் திறந்து வைத்தார். தொடக்க நிகழ்வாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் பங்கேற்ற பயிலரங்கில் இந்திய மொழித் தொழில்நுட்பங்களை கட்டமைப்பதற்கான வளங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'ஓபன் சோர்ஸ்' மொழியைக் கட்டமைக்கும் ஐஐடி மெட்ராஸின் முன்முயற்சியாகவே AI4bharat திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக,  மிதேஷ் கப்ரா, பிரத்யுஷ் குமார்,  அனூப் குஞ்சுக்குட்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்திய மொழித் தொழில்நுட்பத்திற்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation), தானியங்கிப் பேச்சு அறிதல் (Speech Recognition) போன்றவற்றுக்கான அதிநவீன மாதிரிகளும் இதில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய, நந்தன் நீலேகனி, "கூட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவர் தாய்மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 'டிஜிட்டல் இந்தியா பாஷினி மிஷன்' தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பணியில் விரைந்து செயல்பட்டு பாஷினி மிஷன் இலக்கை எட்டும் வகையில் ஏஐ4பாரத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.

'AI4bharat நீலேகனி மையத்தை உருவாக்கிய குழுவினரை வாழ்த்திப் பேசிய ஐ.ஐ.டி. சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "இந்திய மொழிக்கான செயற்கை நுண்ணறிவுப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த்தாகும். இதில் ஐஐடி சென்னை தலைமை வகித்துச் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். AI4bharat மையத்தின் அதிநவீன ஆராய்ச்சிகள் உலகளவில் பயன்பாட்டிற்கு வரும் நாட்களை எதிர்பார்க்கிறேன்" என்றார்.

இந்த மையம் உருவாக்கியுள்ள பல்வேறு அதிநவீன 'ஓபன் சோர்ஸ்' வளங்களை அனைவரும் பயன்படுத்தக் கூடியவையாகும். இதன் மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

அவற்றை https://ai4bharat.iitm.ac.in/  என்ற இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருகை

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget