Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் போட்டி : பங்கேற்ற 24 வீரர்களும் வெற்றி
Chess Olympiad 2022 Chennai LIVE Updates: செஸ் ஒலிம்பியாட் தொடரில் அடுத்தடுத்து நடக்கவுள்ள நிகழ்வுகளை கீழே காணலாம்
LIVE
Background
Chess Olympiad 2022 Chennai LIVE Updates:
சென்னையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று தொடங்குகிறது.
மாமல்லபுரத்தில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணி சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள். இதற்காக அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டதோடு பணிகள் நிறைவுற்று போட்டித் தொடருக்கான ஒத்திகை சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரவுள்ளார். இதனால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில்
44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நாளை தொடங்கவுள்ளதையொட்டி போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.@chennaichess22 #ChessChennai2022 pic.twitter.com/3Pb434t5X3
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 27, 2022
இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் வந்தது. அங்கு பல மாவட்டங்களுக்கும் சென்ற ஒலிம்பியாட் ஜோதிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் நாளை செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஒலிம்பியாட் ஜோதி போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரத்திற்கு நேற்று வந்தடைந்தது.
இதற்கிடையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வரும் வீரர்களை வரவேற்க கற்தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறும் அரங்கை ஆய்வு செய்து வீரர்களுக்கு இரவு விருந்து அளித்தார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் செல்லும் பாதைகளில் 10 அடிக்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நேரு உள்விளையாட்டரங்கில் இதற்கான தொடக்க விழா நடக்கவுள்ளதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி : அதிபன் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பி பிரிவில் 37-வது நகர்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது சையத்தை வீழ்த்தி அதிபன் வெற்றி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி : பங்கேற்ற 24 வீரர்களும் வெற்றி
இன்றைய செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்காக 6 அணிகளாக களம் இறங்கிய 24 பேரும் வெற்றி பெற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி : முதல் சுற்றில் இந்தியா வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் நாளில் எதிர்கொண்ட அனைத்து அணிகளையும் இந்தியா அணி ஒயிட் வாஷ் செய்தது.
Chess Olympiad 2022 LIVE: விருந்தோம்பல் குறித்த திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி
”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. ” என்ற திருக்குறளை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் போட்டி எற்பாடுகள்; பிரதமர் பாராட்டு!
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான எற்பாடுகளை தமிழ்நாடு குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.