மேலும் அறிய

பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது எப்படி? நேரில் பார்த்தவர் பேட்டி

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மீனம்பாக்கம், சாந்தோம், மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணியில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் சரிந்து விழுந்த மேற்கூரையின் அடியில் சிக்கி இருந்த 13 பேர் மீட்கப்பட்டனர். இதில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த கந்தசாமி என்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விபத்து ஏற்பட்ட சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலைக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர், விபத்து நடைபெற்ற பெட்ரோல் பங்கில் விபத்து குறித்தும் அதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ இதுவரை இதுபோன்ற விபத்து நடைபெற்றதில்லை. இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் வருத்தத்தை அளிக்கும் வகையில் மரணமடைந்துள்ளார். 

சரிந்து விழுந்த மேற்கூரைய அப்புறபடுத்த மின்னணு முறையிலோ அல்லது கைகளினாலோ அப்புறப்படுத்த முடியாது. அப்படி முறையினாலோ அப்புறப்படுத்த முயற்சி செய்தால், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் சேமித்து வைத்திருப்பார்கள் என்பதால் பெரும் விபத்து ஏற்பட்டுவிடும். இதனால் ஐ.ஓ.சி.எல்-இல் இருந்து வந்துதான் அப்புறப்படுத்த முடியும். 

பெட்ரோல் பங்க் மட்டும் இல்லாது அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் மேற்கூரையின் நிலைத்தன்மையை முறையக பரிமரிக்க வேண்டியது அவரவர் கடமை. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு 17 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என கூறுகிறார்கள் இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார். 

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மழைக்கு ஒதுங்கியவர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. சைதாப்பேட்டையில் உள்ள ஜோன்ஸ் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்புப்பணிகளை செய்தனர்.  இந்த சம்பவத்தில் மேற்கூரையின் கீழே சிக்கி  பெட்ரோல் பங்கின் ஊழுயர் கந்தசாமி என்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மீட்புப் பணிகளைச் செய்தனர். சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் இருந்து 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

ஏற்கனவே இந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி இருந்ததால் பாரம் தாங்காமல் மேற்கூரை சரிந்து விழுந்தது எனக் கூறப்படுகிறது.  

விபத்து நடந்தது எப்படி 

விபத்தை நேரில் பார்த்தவர்கள், இடி இடித்த பின்னர்தான் பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக தெரிவித்தனர். அப்போது பலத்த காற்றும் வீசியதுஎன அவர்கள் தெரிவித்தனர். 

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மீனம்பாக்கம், சாந்தோம், மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணியில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. போரூர், பழவந்தாங்கல், வளசரவாக்கத்திலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget