மேலும் அறிய
Advertisement
இதை மட்டும் செய்யாதீர்கள்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொன்ன அட்வைஸ்..!
நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் ஆபத்தான முறையில் இளைஞர்கள் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழையொட்டி பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான,1,500 ஏக்கர் பரப்பளவுகளை கொண்ட, தாமல் ஏரியானது,தொடர் கன மழையின் காரணமாக முழு கொள்ளளவான 18 அடியும் முழுவதுமாக நிரம்பி ஏரியின் கலங்கள் வழியாக உபரி நீரானது தொடர்ந்து வெளியேறி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தாமல் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியிலுள்ள நீர் இருப்பு, வெளியேற்றம் என்பன குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி கூறுகையில், வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் தென்னேரி ஏரி, உத்திரமேரூர் பெரிய ஏரி, தாமல் என மூன்று மிகப்பெரிய ஏரிகள் உள்ளன. இதில் மூன்றாவதாக உள்ள தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது கலங்கள் வழியாக வெளியேறி வருகின்றது. பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், பொது மக்கள் குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் கிராமப்புறங்களிலுள்ள ஏரிகள், அந்தந்த கிராம நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பதற்கு கிராம ,ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், வி.ஏ.ஓ ஆகியோர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது தாமல் ஏரியில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் குளிப்பது,மீன் பிடிப்பது போன்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோல் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் பகுதிகள் குறித்தான தகவல்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion