மேலும் அறிய
Advertisement
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்த புதிய ஹெல்த் கேர் வசதி
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய ஹெல்த் கேர் வசதியை, சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிலிப்ஸ் அஸுரியன் 7 சி12 கேத் லேப் வசதி புதிதாக துவங்கப்பட்டுள்ளது. பிலிப்ஸ் அஸுரியன் 7 சி12 கேத் லேபை தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்திரமேஷ் மற்றும் கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் அலோக் குல்லர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இன்று GLENEAGLES GLOBAL மருத்துவமனையில் ADVANCED CATH LAB திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Cathlab pic.twitter.com/M6fdVfie9I
— Subramanian.Ma (@Subramanian_ma) October 11, 2022
இந்த புதிய வசதியை துவக்கி வைத்து பேசிய தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், “பிலிப்ஸ் அசூரியன் 7 சி12 கேத் லேப்பைத் திறந்துவைத்ததற்காக இந்த நிறுவனத்தில் உள்ள ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும், குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய கேத் லேப் வசதி, நோயாளிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான இருதய மற்றும் நரம்புக்குழாய் சிகிச்சைகளை வழங்க உதவும். கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் முன்னேற்றம் கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தக்கதாக உள்ளது மற்றும் இதய ஆரோக்கியத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என பேசினார்.
தொடக்க விழாவில் பேசிய மருத்துவர் அலோக் குல்லார் கூறுகையில், "அசூரியன் 7 சி12 கேத் லேப் தற்போது நகரத்தின் மிகவும் மேம்பட்ட கேத் லேப்களில் ஒன்றாகும். இதய நோய்களின் அதிகரித்து வரும் போக்கைக் கருத்தில் கொண்டு, சமூகத்திற்கு சேவை செய்ய நாங்கள் முழுமையாக தயாராக இருப்போம். கேத் லேபை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு மேம்பட்ட இருதய, இரத்தக்குழாய் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை தலையீடுகளை நாடு முழுவதும் அதிக துல்லியம், பாதுகாப்பு மற்றும் சிறந்த மருத்துவ விளைவுகளுடன் வழங்குவதற்கான முன்னோடியாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிலிப்ஸ் அசூரியன் 7 சி12 கேத் லேப் இன் அறிமுகத்துடன், கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, அதிநவீன சிகிச்சையை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இப்போது சுகாதாரத்தில் புதிய தரநிலைகளை அமைக்கும். உயர்தர தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட இதய செயல்முறைகளை உறுதிப்படுத்த முடியும். இந்த வசதி குறைந்தபட்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரம், விரைவான நடைமுறைகள், சிக்கல்களின் அபாயத்தைக் குறைத்தல், உகந்த செலவு மற்றும் ஒட்டுமொத்த சிறந்த விளைவுகளை உறுதி செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion