மேலும் அறிய

வரம்பு மீறும் பள்ளி மாணவர்கள்?- கொதித்தெழும் கல்வியாளர்கள்! தீர்வைப் பற்றி யார் பேசுவது?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுப் பள்ளி மாணவர்களின் காணொளிகள்  தினந்தோறும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

ஆசிரியரை மிரட்டுவது, மேசைகளை உடைப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுப் பள்ளி மாணவர்களின் காணொளிகள்  தினந்தோறும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. காணொளிகளில் செங்கல்பட்டு, திண்டிவனம் வேப்பேரி, திருச்செங்கோடு, வேலூர் தொரப்பாடி, திருவண்ணாமலை எனப் பள்ளிகளின் பெயர் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது.

கொரோனா காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், நெறிபிறழ் நடத்தைகளுடன் நடந்துகொள்வதாக ஒருதரப்பு குற்றம் சாட்டுகிறது. ஆசிரியர்களுக்குக் கண்டிக்கும் சுதந்திரம் வழங்கப்படாததால் இத்தகைய சம்பவங்கள் நடப்பதாக மறுதரப்பு தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன்களின் அதீதப் பயன்பாடு, திரைப்படங்களின் தாக்கத்தால் மாணவர்களின் நடத்தை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கருத்துகள் உலவுகின்றன. 

பிரச்சினைகளைப் பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டிருந்தால் தீர்வுகள் பற்றி யார் பேசுவது என்று கேள்வி எழுகிறது.

இதுகுறித்து 'ஏபிபி நாடு'விடம் பேசினார் எழுத்தாளரும் ஆசிரியருமான சிகரம் சதிஷ்.

''அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அபூர்வம். ஆனால் இன்றைக்கு அடிக்கடி இவை காட்டப்படுவதால், மாணவர்களது போக்கு எங்கே மாறிவிட்டதோ என அச்சப்பட வேண்டியிருக்கிறது. கொரோனா கால இடைவெளியில் கற்றலை மட்டுமல்ல, நிறையக் கட்டுப்பாடுகளையும் மாணவர்கள் இழந்து நிற்கிறார்கள்.

எந்த மாணவரும் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. அவர்கள் கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகின்றனர். ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு வகுப்பறைக்குள் வந்திருக்கும் மாணவருக்கும், ஆசிரியருக்குமான இடைவெளியைக் குறைப்பதற்குத் தேவையான அத்தனை வழிமுறைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும்.

 


வரம்பு மீறும் பள்ளி மாணவர்கள்?- கொதித்தெழும் கல்வியாளர்கள்! தீர்வைப் பற்றி யார் பேசுவது?

மாணவர்கள் தீவிரவாதிகள் அல்ல, ஆசிரியர்கள் ஹிட்லர்களும் அல்ல

மாணவர்கள் எவரும் தீவிரவாதிகள் அல்ல. வகுப்பறையில் அவர்கள் செய்யும் நெறிபிறழ் நடத்தைகளைச் சரியாகக் கையாளவில்லை என்றால், வரும் நாட்களில் அவை, வகுப்பறை வன்முறைகளாக திசை மாறக்கூடும்.

ஆசிரியர்களின் கண்டிப்பைத் தண்டிப்பாகக் காட்டும் ஊடகங்களின் மனநிலையில் பெருத்த மாற்றம் தேவை. எந்த ஆசிரியரும் மாணவருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு மட்டுமே எதிரானவர்கள்.

தன் குழந்தையின் குற்றங்களை வெறுக்கும் தாயும், தந்தையுமே, நல்ல பெற்றோராக இருக்க முடியும். அதனைப் போல தனது மாணவனின் தவறுகளைத் திருத்த நினைக்கும் ஆசிரியர்களே நல்ல ஆசிரியராக இருக்க முடியும்.

இல்லம் தேடிக் கல்வி வழங்க நினைக்கும் அரசு, ஏன் பள்ளி தேடி வரும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நடத்தையில் மாற்றமே கல்வி என்பது உண்மையானால், ஆசிரியர்களை சுதந்திரமாகக் கற்பித்தலை நிகழ்த்த என்ன தேவையோ அது அத்தனையும் அரசு செய்ய வேண்டும். இல்லையேல் மாணவரது நடத்தையில் மட்டுமல்ல, ஆசிரியர்களது நடத்தையிலும் ஏமாற்றமே மிஞ்சும்.

பிரச்சினைகளைத் தாண்டி தீர்வுகள் பற்றியும் பேசுவோம்!

1. தங்களது குழந்தைகளுக்காக அனைத்துப் பெற்றோர்களுமே உழைக்கின்றார்கள். அவர்களது முன்னேற்றத்திற்காக ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய வளர்ச்சியின் மீதான அக்கறை என்பது குழந்தைகளது விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக மட்டும் இருக்கின்றது. ஆனா அவர்களைக் கண்காணிக்கப் பெற்றோர்கள் தவறி விடுகின்றனர். குழந்தைகள் திசைமாறுவதை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.

காரணம் முன்பெல்லாம் ஆசிரியர்களைப் பெற்றோர்கள் அடிக்கடி சந்திக்கும் வழக்கம் இருந்தது. பெற்றோர் சந்திப்புக் கூட்டம் நடந்தது. தேர்வு முடிந்ததும் மாணவர் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடும் வழக்கம் இருந்தது. அதன் மூலம் மாணவர்களின் நடத்தை, கல்வி சார்ந்த பிரச்சினைகள் ஆராயப்பட்டன. தீர்வுகள் உடனுக்குடன் கிடைத்தன. ஆனால் இன்றைக்கு அந்த வழக்கங்கள் கரைந்துபோய் விட்டன. பெற்றோர் - ஆசிரியர் கழகம் என்பதே ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான முதன்மையான அமைப்பு. அதனை உயிர்ப்பிக்கும்போக்கு விரைந்து நடைபெற வேண்டும். 

2. மாணவர்களின் கற்றல் சுதந்திரம் என்னும் பெயரில் ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரத்திற்கு கைவிலங்கிட்டு விட்டோம். ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியைச் சரிவர ஆற்ற விடாமல், கட்டுப்பாடுகள் தடுக்கின்றன.

அதேபோலக் கற்பித்தலுக்காக மட்டும் ஆசிரியர்களைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, பிற பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.


வரம்பு மீறும் பள்ளி மாணவர்கள்?- கொதித்தெழும் கல்வியாளர்கள்! தீர்வைப் பற்றி யார் பேசுவது?

திரை ஊடகங்களின் காட்சிப்படுத்தல்

3. சின்னத்திரை, வண்ணத்திரை என இரண்டும் போட்டி, போட்டுக்கொண்டு நெறிபிறழ் நடத்தை உடையவர்களையே நாயகர்களாகக் காட்டுகின்றன.

ஆசிரியர்களைக் கேலி செய்தல், பள்ளியில் காதல் செய்தல், போதைப் பொருள்களைப் பயன்படுத்தல்... இவை எல்லாம் பள்ளிப்பருவத்தின் ஓர் அங்கமெனக் காட்டுவதும், அது படைப்பாளியின் படைப்புரிமை என்னும் ஊடகங்களின் போக்கு முற்றிலுமாக மாற வேண்டும். அவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

விளையாட்டு வகுப்புகள் கட்டாயம் 

4. பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் கட்டாயம் நடைபெற வேண்டும். அங்குதான் கீழ்ப்படிதல், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல், விட்டுக்கொடுத்தல், குழு மனப்பான்மை என அத்தனை நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் இன்றைக்கு விளையாட்டுப் பாடவேளைகள் என்பது அடுத்த பாடவேளைகளுக்கு விட்டுக்கொடுக்கும் பாடவேளைகளாக மாறிவிட்டன. மதிப்பெண்கள் அதிகரித்து விட்டன. மதிப்பான எண்ணங்கள் குறைந்து விட்டன. விளையாட்டு வகுப்புகளின் மூலம் மாணவர்களது மனவெழுச்சியில் சமநிலை ஏற்படும் என்கிற அறிவியலை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்

5. இன்றைக்கு மத, இன, சாதி ரீதியிலான குழுக்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டன. அவை பல இடங்களில் ஆசிரியர்கள் வடிவிலும் நுழைந்திருக்கின்றன. சாதி, மத அடிப்படையில் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுவது, மாணவர்களிடம் அதனை ஊக்குவிப்பது, சில குறிப்பிட்ட தலைவர்களை மட்டும் பள்ளிகளில் கொண்டாடுவது என மாணவப் பருவத்தில் நஞ்சு வளர்க்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களையும் அப்புறப்படுத்த வேண்டி இருக்கிறது.

அத்தோடு கல்வியோடு நேரடித்தொடர்பு இல்லாத நபர்கள் கல்வி ஆர்வலர்கள் என்னும் பெயரில் பள்ளிகளுக்குள் நுழைந்து, மாணவ, மாணவியரைத் தவறாக வழிநடத்துவதையும், தனித்திருக்கும் பெண் ஆசிரியர்களைத் தடம் மாற்றுவதையும் தடுத்திட வழிகாண வேண்டும்.


வரம்பு மீறும் பள்ளி மாணவர்கள்?- கொதித்தெழும் கல்வியாளர்கள்! தீர்வைப் பற்றி யார் பேசுவது?

6. நன்றாகச் செயல்படும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல், ஊடக வெளிச்சத்திற்காக மட்டுமே செயல்படுகின்ற ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு மட்டும் அங்கீகாரம் கொடுக்கப்படும்பொழுது, சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் சோர்ந்து விடுகின்றனர். அவர்களின் சோர்வு மாணவர்களின் மீதான அக்கறையைக் குறைத்து விடுகின்றது. களத்தில் உழைப்பவர்களைக் கண்டுபிடித்துப் பாராட்ட வேண்டியது அவசியம்.

குறைந்தபட்ச தண்டனை

7. ஆசிரியரோ, மாணவரோ தவறு செய்தால் குறைந்தபட்ச தண்டனையை உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அதுவே மற்றவர்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்தி, தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பைக் கொடுக்கும். அதேபோல ஆசிரியர்கள் மீதான பொய்யான புகார் எனில், அந்தப் புகார் அளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்.

8. பெண் ஆசிரியர்கள், மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள்மீது தயவின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளும், ஆசிரியர்களும் சில இடங்களில் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது என்பது தொடர்ந்துகொண்டே வருவது கல்வித்துறையின் மீதான நல்லெண்ணத்தைச் சிதைத்துவிடும்.

9. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் குறைதீர்ப் பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இக்குழு மாதம் ஒருமுறை மாணவர்களைச் சந்தித்து உரையாட வேண்டும். மாணவர்கள், தங்களது பிரச்சினைகளை, தேவைகளைச் சொல்ல அனுமதிக்க வேண்டும். மாணவர் குறைதீர்க் குழு, மாவட்ட நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பில் இருத்தல் அவசியம்

10. பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்கவே மாட்டோம் என்று வைத்திருந்த அலைபேசியை கட்டாயக் கற்றல் உபகரணமாக மாற்றிவிட்டோம். அதன் மூலம் இணையத்தில் இருக்கும் அத்தனை வக்கிரங்களும், மாணவர்களிடத்தில் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றன.

அலைபேசி பயன்பாட்டுக்குப் பள்ளியில் தடை செய்ய வேண்டும். இயலாது எனில் கற்றலுக்காக மட்டுமே பயன்படத்தக்க வகையில் அனைத்து மாணவர்களுக்கும் கையடக்கக் கணினியை (டேப்லெட்) வழங்கிவிட்டு, கற்பித்தலை வழங்கத்தொடங்க வேண்டும். இல்லையேல் விளைவுகள் இன்னும் மோசமாகச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

 

வரம்பு மீறும் பள்ளி மாணவர்கள்?- கொதித்தெழும் கல்வியாளர்கள்! தீர்வைப் பற்றி யார் பேசுவது?
ஆசிரியர் சிகரம் சதிஷ்

எந்த உபகரணமும் கற்பித்தலுக்கு உதவலாமே தவிர, ஆசிரியராக முடியாது. தொழில்நுட்பங்கள் உணவில் உப்பாகத்தான் இருக்கும். தவிர, ஒருபொழுதும் உப்பு உணவாகாது. இப்பொழுது உப்பை உணவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றோமோ என்னும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு மாற்றுத் தொழில்நுட்பம் இல்லை என்பதை உணர்தல் அவசியம்''.

இவ்வாறு ஆசிரியர் சிகரம் சதிஷ் தெரிவித்தார். 

இதையும் வாசிக்கலாம்: போதை, வன்முறை... தடம் மாறும் மாணவ சமுதாயம்... காரணங்களும், மீட்கும் வழிமுறைகளும்!

இவற்றைத் தாண்டி ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான உரையாடல் தினந்தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும். உரையாடல்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும். வன்முறையைக் குறையும். பிரச்சினைகள் நிறைந்த புறச்சூழலை சமநிலைப்படுத்தும். அதேபோல இன்றைய தலைமுறை மாணவர்களைக் கையாளும் விதம் குறித்து, ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். 

மேற்கண்ட தீர்வுகளைத் திறந்த மனதோடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். உரியவற்றையும், உகந்தவற்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே வருங்காலத் தலைமுறையை நேசிக்கும் அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget