Gold price: மக்களே கேட்டுக்கோங்க....தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொடுமாம்...!
தங்கம் விலை வெகு விரைவாக 60 ஆயிரத்தை நெருங்கும் , அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடும் - சலானி குழும நிர்வாக இயக்குனர் ஜெயந்திலால் சலானி
துப்புரவு பணியாளர்களுக்கு - தீபாவளி பரிசு
சென்னை தி.நகரில் சலானி நகைக் கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி ஏற்பாட்டில் அடைமழை மற்றும் பேரிடர் காலத்தில் இரவு பகல் பாராமல் தூய்மை பணியாற்றி சென்னை மாநகரை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி திருநாள் சிறப்பு பரிசு மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சலானி குழும நிர்வாக இயக்குனர் ஜெயந்திலால் சலானி
இன்றைய தீபாவளி கொண்டாட்டம் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருக்கும். முறையாக துப்புரவு தொழிலாளர்களை அழைத்து தீபாவளி கொண்டாடி இருக்கிறோம். நகரத்தையே சுத்தமாக வைத்துக் கொண்டு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் மக்களை பாதுகாத்து வருகிறார்கள்.
தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை
வெகு விரைவாக தங்கம் விலை 60 ஆயிரத்தை நெருங்கம் , தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை , அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தங்கம் விலை 1 லட்சத்தை தொடும் என்று கூறினார்.
முன்னதாக பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.
சலானி நிறுவனத்தின் சார்பாக சென்னை மாநகரில் அடை மழை பெய்தாலும் எவ்வளவு குப்பைகள் சேர்ந்தாலும் தீபாவளி பட்டாசு குப்பைகள் எத்தனை டன் கணக்கில் வந்தாலும் உடனடியாக பொறுப்பான சேவை மனப்பான்மையோடு துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்கிற காரணத்தினால் சென்னை மாநகரம் சுத்தமாக இருக்கிறது. எனவே இந்த குழுமத்தின் சார்பாக துப்புரவு தொழிலாளர்களை அழைத்து தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற பொது நோக்கோடு இன்று துப்புரவு தொழிலாளர்களோடு சலானி நிறுவனத்தின் உடைய சார்பாக தீபாவளி கொண்டாடியிருக்கிறோம். துப்புரவு தொழிலாளர்களை அழைத்து அவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பு பரிசுகளை வழங்கி நல்ல உணவளித்து சிறப்பாக பாராட்டி இருக்கிறோம். நாளை நடைபெறுகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு பட்டாசு வெடிக்கக் கூடியவர்கள் இல்லத்தில் பாதுகாப்பு தன்மையோடு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
தீபாவளி திருநாளில் சபதம்
உள்நாட்டு வணிகம் பாதுகாப்பதற்கு எல்லோரும் தீபாவளி திருநாளில் சபதம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகள், சாதாரண வணிகர்களை கங்கணம் கட்டி வரக்கூடிய நிலையில் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க உள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தீபாவளி அன்று பொருள் வாங்கினால் உள்நாட்டு வணிகர்களிடம் வாங்குவோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.