சரக்கு லாரி-பைக் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
இருசக்கர வாகனம் தூக்கிவீசப்பட்டு, அதில் பயணம் செய்த ராஜாராம் , காமாட்சி மற்றும் சரண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் . பலத்த காயம்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வின்னரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் .
பேர்ணாம்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் , மனைவி மற்றும் இருகுழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலி .
வேலூர் மாவட்டம் , பேர்ணாம்பட்டு அருகே உள்ள பாஸ்மரபந்தா என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (37) , கட்டுமான தொழிலாளியான இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வேலூர் , காட்பாடி பகுதியை அடுத்த வள்ளிமலை கிராமத்தை சேர்ந்த காமாட்சி (28 ) என்ற மற்றொரு கட்டிட தொழிலாளியலை மனம் முடித்து சரண் (6 ) மற்றும் வின்னரசன் (4) ஆகிய இரண்டு மகன்களுடன் , வள்ளிமலையிலே குடும்பத்துடன் தங்கி , கட்டிட வேலை செய்து வருகிறார் .
பேர்ணாம்பட்டு மலைமேல் உள்ள பாஸ்மரபந்தா கிராமத்திற்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தாலும் , வள்ளிமலை பகுதியில் இருப்பதால் கணவன் மற்றும் மனைவி இருவரும் குழந்தைகளை , மாமியார் வீட்டில் , அவர்களது பராமரிப்பில் விட்டுவிட்டு வேளைக்கு சென்று வருவதற்கு வசதியாக இருந்ததாலும் , தனது மாமியார் வீட்டிலே குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார் ராஜாராம் .
இந்நிலையில் , தனது சொந்த ஊரில் நடைபெறவுள்ள கோவில் திருவிழாவில் பங்குபெற தனது மனைவி காமாட்சி மற்றும் இரண்டு மகன்களுடன் , இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் பாஸ்மரபந்தா கிராமத்தை நோக்கி பயணம் செய்துள்ளார் .
இருசக்கர வாகனத்தில் நால்வரும் காட்பாடியை அடுத்த பேர்ணாம்பட்டு வட்டாச்சியர் அலுவலகத்தை கடந்து செல்லும் பொழுது , எதிரில் அதிவேகமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு மைதா ஏற்றிவந்த வந்த சரக்கு லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தில் நேருக்குநேராக மோதியது .
நேருக்குநேர் மோதியதில் ராஜாராமின் இருசக்கர வாகனம் தூக்கிவீசப்பட்டு , அதில் பயணம் செய்த ராஜாராம் , காமாட்சி மற்றும் சரண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் . பலத்த காயம்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வின்னரசன் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிர் இழந்தார் .
இறந்தவர் நாலவரின் உடல்களும் , உடற்கூறு பரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் பேர்ணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து , விபத்து தொடர்பாக சரக்கு லாரி ஓட்டுநர் , விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .ஒரே குடும்பத்தை சேர்ந்த , கணவன் , மனைவி மற்றும் இரு குழந்தைகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் , பேர்ணாம்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சாலையில் பாதுகாக்க பயணிக்கவும். அதிவேகம் ஆபத்தை தரலாம். கட்டுப்பாடு இல்லாத வேகம், நம்மை மட்டுமின்றி நம் எதிரே வருவோரையும் பாதிக்கும்