A.N. Radhakrishnan Passed Away: பிரபல கல்வியாளர் ஏ.என். இராதாகிருஷ்ணன் காலமானார்..!
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் (MAHER) வேந்தர் A.N. இராதாகிருஷ்ணன் காலமானார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி கல்வி நிறுவனம் விளங்குகிறது. இந்த நிலையில், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான A.N. இராதாகிருஷ்ணன், இன்று சென்னையில் காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.
தொலைநோக்கு பார்வையும், நாடு போற்றும் கல்வியாளரும், வாரி வழங்கும் கொடை வள்ளலும், பரிவு உள்ளம் உடைய மனித நேயரும், தலைசிறந்த நிர்வாகியும், மனிதப் புனிதருமாகிய, தாங்கள் விட்டுச் சென்ற சீரிய பணிகள் என்றென்றும் தொடரும் என குடும்பத்தினர் மற்றும் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் இறுதி சடங்கானது, நாளை (04.12.2022) 11 மணிக்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் மாணவ மணிகள் கண்ணீர் மல்க ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.