Family Card : குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ளவேண்டுமா? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..
புது குடும்ப அட்டை மற்றும் ஏற்கனவே உள்ள குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள வரும் 14-ஆம் தேதி சென்னையில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
புதிய குடும்ப அட்டை, திருத்தம் மேற்கொள்ள முகாம்; மக்கள் பயன்படுத்தி கொள்ளவும்
புது குடும்ப அட்டை மற்றும் ஏற்கனவே உள்ள குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள வரும் 14-ஆம் தேதி சென்னையில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
பொது வழங்கல் துறை அறிவிப்பு :
குடும்ப அட்டை குறித்து பொது வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மே மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம்:
அதன் அடிப்படையில் மே மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. முகாமானது 14-05-2022 ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Also Read:நகையை அடகு வைத்து ஆன்லைன் கேம்! பணத்தை இழந்து தற்கொலை செய்த மாணவர்! தொடரும் சோகம்!
சேவைகள்:
புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஏற்கனவே உள்ள அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் செய்தல், முகவரி திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாய விலைக்கு வர இயலாதவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read:Ranil Wickremesinghe: நொடிக்கு நொடி பரபரக்கும் இலங்கை! புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்!
புகார் தெர்விக்கலாம்:
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் மற்றும் தனியார் சந்தைகளில் பொருட்களின் விற்கப்படுவது உள்ளிட்ட புகார்களையும் முகாமில் தெரிவிக்கலாம். அதுகுறித்து முகாமில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள பயணாளர்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: BJP MP On Taj Mahal : தாஜ்மஹால் தொடர்பாக கிளம்பும் அடுத்தடுத்த சர்ச்சை .. பாஜக எம்பியால் பரபரப்பு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்