மேலும் அறிய

Co Optex Offer: தீபாவளி வந்துடுச்சு! கோ-ஆப் டெக்ஸ் அதிரடி ஆஃபர் - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

காஞ்சிபுரம் காமாட்சி கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை 30 சதவீத தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று  தீபாவளி 2023 சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர்  கலைச்செல்வி மோகன், குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள்.

 தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ( கோ-ஆப்டெக்ஸ் ) 

கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனை மற்றும் அவர்களின் தேவைகளையறிந்து கைத்தறி இரகங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்பில் உற்பத்தி செய்து 2022-2023 ஆம் ஆண்டின் சுமார் 16.91 கோடி அளவிற்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது.

Co Optex Offer: தீபாவளி வந்துடுச்சு! கோ-ஆப் டெக்ஸ் அதிரடி ஆஃபர் - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

இந்த பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உத்திகளை கையாண்டு அறிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணம் கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி இரக சேலைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பருத்தி இரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகிறது. இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லினன் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள் (GAATHA),  டிசைனர் கலெக்ஷன் போர்வைகள் (GAATHA),  காம்பிரே போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியன விற்பனைக்கு உள்ளன.

Co Optex Offer: தீபாவளி வந்துடுச்சு! கோ-ஆப் டெக்ஸ் அதிரடி ஆஃபர் - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

ரூ. 1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூபாய் 7.07 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023 பண்டிகை விற்பனை இலக்காக ரூபாய் 14.00 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு 0.71 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கு ரூ. 1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி 2023 சிறப்பு விற்பனை

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி 2023 சிறப்பு விற்பனை அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனையங்களிலும் 30%  சிறப்புத் தள்ளுபடியுடன் கோலாகலமாக துவங்குகிறது. தூயப்பட்டு மற்றும் அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுப் புடவைகள் ரூ. 8000 முதல் ரூ.40,000 வரையில் பல வண்ணங்களில் சங்க விலைகே வழங்கப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள்,  டோன் மேட் ஸ்கிரீன் துணிகள் தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 30% சிறப்பு தள்ளுபடியுடன் 

கோ-ஆப்டெக்ஸ் ”கனவு நனவு திட்டம்” மாதாந்திர தவணை திட்டத்தில் 56%  கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கனவு நனவு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. 2020-2021 ஆம் ஆண்டில் ரூபாய் 120.50 இலட்சம் ஆன்லைன் விற்பனை ஆகும். 2021 - 2022 ஆம் ஆண்டின் ரூபாய் 122.50 இலட்சம் மற்றும்  2022 - 2023 ஆம் ஆண்டின் ரூ.141.50 இலட்சம் ஆன்லைன் விற்பனை செய்து கோ - ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் அவர்கள் மிகப்பெரிய இமாலய சாதனை படைத்துள்ளார்கள்.

30% சிறப்பு தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியை இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்குகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (உற்பத்தி & பகிர்மானம்) சு.ஞானபிரகாசம், கோ-ஆப்டெக்ஸ்  மேலாளர் ச.பெருமாள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Embed widget