மேலும் அறிய

உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு

’’மூத்த தேவிக்கு தவ்வை, ஜேஷ்டாதேவி என பெயர்கள் உண்டு. இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.’’

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ளது அரசாணி மங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9 ஆம் நூற்றாண்டை சார்ந்த மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டா தேவி  சிலை, அய்யனார் சிலை ஆகியவற்றை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர். மேலும் மண்ணில் புதைந்த நிலையில் ஒரு சிலையையும் கண்டெடுத்துள்ளனர்

உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு
 
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், அரசாணி மங்கலம் கிராமத்தை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவர் அளித்த தகவலின் பேரில் அக்கிராமத்தை கள ஆய்வு செய்தபோது காளியம்மன் கோயில் அருகிலுள்ள வயல்வெளி பகுதிகளில் பல்லவர்களின் இறுதிக்காலத்தை சார்ந்த இச்சிலைகளை கண்டறிந்தோம். முதலாவதாக மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது, அக்கிராம கோட்டைமேடு வயல்வெளி பகுதியில் இரண்டரை அடி உயரத்தில் 2 அடி அகலத்தில்  அமர்ந்த நிலையில் அடிப்பாகம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது இதன் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தனும் இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள்.
 
உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு
வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடி உள்ளது, மூத்த தேவினுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் மகர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் மார்பில் சன்னவீரமும் தோல்களில் வாகுவளையங்களும், கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட ஆடையோடு  அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது. இவரது வலக்கையில் மலரை ஏந்தியும் இடக்கையை தொங்க விட்டபடியும்
 காட்சி தருகிறார்.

உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு
 
மூத்த தேவிக்கு தவ்வை, ஜேஷ்டாதேவி என பெயர்கள் உண்டு. இவர் திருமாலின் மனைவியான  லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பல்லவர் காலத்தில்  வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. இதனால் பல்லவர்கால ஆலயங்களில் வீற்றிருப்பார் சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த, இந்ததெய்வம் வளமையின் அடையாளமாக குழந்தைப்பேறு தருபவளாக செல்வவளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள் நாளடைவில் மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது. இது பல்லவர்களின் இறுதிக்காலத்தை சார்ந்ததாகும்.

உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு
 
இரண்டாவதாக காளியம்மன் கோயில் அருகில் உள்ள வயல் வெளிப் பகுதியில் கரும்புத் தோட்டங்களுக்கு இடையில் வேப்ப மரத்தடியில் மூன்றரை அடி உயரத்தில் இரண்டு அடி அகலத்தில் அய்யனார் சிலையை கண்டறிந்தோம். இவரது தலைமுடி ஜடாபார சிகை அலங்காரத்துடன் காதுகளில் பத்ர குண்டலமும் கழுத்தில் அணிகலன்கலாக கண்டிகை  மற்றும் சரப்பளியும் மார்பில் முப்புரி நூலும் தோல்களில் வாகு வளையங்கள் கைகளில் காப்பு ஆகியவற்றுடன் வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடித்து உட்குடிகாசன நிலையில் வலக்கையில் சென்டை ஏந்தியும் இடக்கையை கால் முட்டியின் மீது வைத்து  ஓர் இருக்கையில் அமர்ந்து அழகிய நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். இவரது இடையில் முடிச்சுகளுடன் கூடிய ஆடை தொடைவரை நீண்டு காணப்படுகிறது. இது 9ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்‌.

உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு
 
மூன்றாவதாக காளியம்மன் கோயில் அருகில் உள்ள ஆலமரத்தடியில் ஒரு பெண் சிலை அழகிய வேலைப்பாடுகளுடன் முகம் மட்டும் தெரிந்த நிலையில் எஞ்சிய பகுதி மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இதை தோண்டி எடுத்து சுத்தம் செய்த பிறகே, இதன் முழு விவரம் அறிய முடியும். அரசாணி மங்கலம் கிராமம் பழமையான கிராமமாகும் இக்கிராமத்தில் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. 
 
உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு
 
மேலும் கோட்டைமேடு என்ற பகுதியும் அவ்வூரின் தொன்மையை கூறுகிறது. இப்படி வயல்வெளியில் மண் மேட்டில் புதர் காட்டில் நம் முன்னோர்களின் வரலாற்று சின்னங்கள் மறைந்து அழிந்து கொண்டிருக்கின்றன அவற்றை உரிய கவனம் செலுத்தி மீட்டெடுத்து பாதுகாப்போம், கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு  அடையாளமாக பறைசாற்றி கொண்டிருக்கும், இவ்அரிய  கலை பொக்கிஷங்களை காப்பது நம் கடமையாகும் என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget