மேலும் அறிய

இயக்குனர் சுசிகணேசன் தொடர்பான வழக்கு; லீனா மணிமேகலைக்கு நீதிமன்ற அறிவுறுத்தல் என்ன?

இயக்குனர் சுசிகணேசன் தரப்பில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என கவிஞர் லீனா மணிமேகலையிடம் உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
 
நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மீ டூ’’ ஹேஷ்டேக்  மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு  சுமத்தியிருந்தார்.
 
இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அந்த அவதூறு வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ள லீனா மணிமேகலை, விசாரணை நடத்தி வரும் மாஜிஸ்ட்ரேட் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனவும் எனவே வழக்கை வேறு மாஜிஸ்ட்ரேட்க்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சுசிகணேசன் தரப்பில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என கவிஞர் லீனா மணிமேகலை தரப்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணைய ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
 

 
டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிரான வழக்கு 2000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி
 
தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிராக  நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்த காவலரின் வழக்கை 2000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணாச்சலம் என்பவர் 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2003ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக கருதி பணி மூப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபி-க்கு அருணாச்சலம் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அருணாச்சலம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஜெ.  ஆஜராகி, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு மனுதாரரின் கோரிக்கைய டிஜிபி பரிசீலித்ததாகவும், பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்காமல் 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்த காரணத்தால், மனுதாரர் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இந்த தகவலை மறைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தவறான மனுவை தாக்கல் செய்ததற்காக இரண்டாம் நிலை காவலரான மனுதாரர் அருணாச்சலத்திற்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து, டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த அபராதத் தொகையை தமிழ்நாடு காவல்துறை மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கவும் மனுதாரருக்கு  உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget