மேலும் அறிய

அதிகாரிகளை பார்க்க முடியல ; நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை என கூறியதற்கு , நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என சொல்லுங்கள் நான் வந்து பார்க்க வைக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்

கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். 

மேலும் மழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது  பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் துணை முதலமைச்சரிடம் விளக்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;

அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை கொடுக்கப்பட்டு உள்ளது. சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் சராசரியாக 5.5 செ.மீ அதிகப்பட்சமாக பெருங்குடியில் 7.35 செ.மீ மழையும் செங்கல்பட்டில்  1.0 செ.மீ மழையும் திருவள்ளூரில் 0.6 செ.மீ மழையும் காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து இருக்கிறது. 

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை  ஆய்வு செய்தோம். முன்னெச்சரிக்கை ஏற்பாடு மற்றும் தற்போது நிலை குறித்து கேட்டறிந்தோம். 1494 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது.158 அதி விரைவு மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படியும் அக்டோபர் மாதம் பெய்த மழையின் கருத்தில் கொண்டும் கூடுதல் மோட்டார்களை நிறுவி இருக்கிறோம். 

329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 120 உணவு தயாரிக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் 95 ஆக இருந்தது தற்போது அதன் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறோம். 

தண்ணீர் தேங்கவில்லை

கணேசபுர சுரங்கப்பாதையை தவிர மற்ற 21 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. கணேசபுரம் சுரங்க பாதையில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சுரங்க பாதை மூடி வைக்கப்பட்டுள்ளது. காலை 9.30  மணி வரை எந்த பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிராதான 3 கால்வாய்களில் வேலை சென்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் நிறைவு பெறும். திருச்சி, மதுரை, தஞ்சாவூரில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. அடுத்து எழிலகம் சென்று பார்வையிட்ட பிறகு நான் கூறுகிறேன். இப்போதைக்கு சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

புகார்கள் வரவில்லை

பொது மக்களிடம் பெரிய புகார் ஏதும் வரவில்லை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் புகார் அளிக்கிறார்கள். அதுவும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவாக தொலைபேசி வாயிலாக புகார் ஏறும் வரவில்லை. 

நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க ?

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 22000 பேர் தயார் நிலையில் உள்ளனர். மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை என கூறியதற்கு , நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என சொல்லுங்கள் நான் வந்து பார்க்க வைக்கிறேன்.

பட்டினம்பாக்கம் பகுதியில் நேற்று இரவில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாக குறித்த கேள்விக்கு இன்னும் சற்று நேரத்தில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget