மேலும் அறிய
Advertisement
விநாயகர் சதுர்த்தியன்று விதியை மீறினால் கடும் நடவடிக்கை - ஒலி பெருக்கியில் எச்சரிக்கும் போலீசார்
’’யாரேனும் பொது இடங்களில் சிலை வைப்பதையும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு’’
விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தமிழ்நாடு அரசு தடை விதித்து வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த தடைக்கு பாஜக உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் விநாயகர் சிலை நல சங்கத்தினர் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக தமிழக அரசின் அரசாணை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை ஆட்டோ வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் எடுத்துக் கூறி வருகின்றனர்.
காவல்தறையினர் தாமாக ஆட்டோக்களில் பொது இடங்களுக்கு சென்று ஒலிபெருக்கி மூலமாக விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் அதனை ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுமதி கிடையாது.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். தங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள குளம் அல்லது கிணறுகளில் கரைத்துக்கொள்ளலாம் இல்லையெனில் தங்கள் வீடுகளின் அருகே உள்ள கோவில்களின் வெளியே வைத்துவிட்டு செல்லலாம் அதனை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும்.
மேலும் இந்த அறிவிப்பானது தனிநபர்களுக்கு மட்டுமே செல்லும் வேறு எந்த வித அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கட்சியினர்களுக்கும் செல்லாது. ஆகவே இதனை மீறி யாரேனும் பொது இடங்களில் சிலை வைப்பதையும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்த விதியினை மீறுவோர் மீது கடலூர் காவல் துறையின் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion