மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
28 ஆவது பிறந்தநாளை காணும் கடலூர் மாவட்டம் - செல்ல வேண்டிய முக்கிய இடங்கள்...!
’’தென் ஆற்காடு மாவட்டமாக இருந்த பகுதிகள் 1993ஆம் ஆண்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது’’
பல சிறப்புகளுக்கும் பெருமைகளுக்கும் உரிய கடலூர் மாவட்டத்திற்கு இன்று 28 ஆவது பிறந்தநாள், கடலூர் மாவட்டம் முதலில் ஆற்காடு மாவட்டமாக இருந்து பின்னர் வடஆற்காடு மற்றும் தென்னாற்காடு என்று பிரிந்தது. அதற்கு பின் 1993 செப்டெம்பர் மாதம் 30 ஆம் தேதி கடலூர் மாவட்டம் என பிரிக்கப்பட்டது. இப்போது கடலூர் மாவட்டத்தில் 3 பிரிவுகளும், 10 தாலுக்காள், 683 கிராம ஊராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகள் உள்ளன மேலும் மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
கடலூர் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் ஆகும். இங்கு சிறப்பு மிக்க கட்டிடங்கள், பழமையான கோயில்கள், வரலாற்று நினைவிடங்கள், சிதம்பரம் நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்த்துக்கீசியர்கள் வணிகம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறி வள்ளலார் பிறந்த இடம் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் முதன் முதலில் தமிழகத்தின் தலைநகராக இருந்த பெருமை என்று கடலூர் பல சிறப்புகளை தனக்கென கொண்டுள்ளது.
இங்கு உள்ள வெள்ளி கடற்கரை தான் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும், கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு மற்றும் கொள்ளிடம் என ஐந்து பெரிய ஆறுகள் ஓடி நிலத்தை செழிப்பாக்குகின்றன. மேலும் அதிகமான மீன் பிடி தொழில் நடக்கும் இடமாகவும், தமிழ்நாட்டின் மிகவும் வலுவான மீன்பிடித் துறைகளை கொண்டு பெருமளவிலான மீனவர்களின் மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகவும் விளங்குகிறது.
மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகரில் தான் தமிழகத்தின் தலை சிறந்த முந்திரி மற்றும் பலா பழங்கள் கிடைக்கும் இடமாக விளங்குகிறது, இங்கு விளையும் பலா மற்றும் முந்திரியானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது, மேலும் மிகவும் அரிதாக காணப்படும் சதுப்பு நில காடுகள் இருக்கும் பிச்சாவரம் கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளது.
மேலும், இங்குள்ள நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இதுமட்டுமின்றி சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி கடலூரில் தான் உள்ளது இவ்வாறு பல சிறப்புகளை உள்ளடக்கியது தான் கடலூர் மாவட்டம் ஆகும். கடலூர் மாவட்டம் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் ஆகும், கடந்த 2004 ஆம் ஆண்டு 'சுனாமி', 2011 ஆண்டு 'தானே' புயல் என பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்துள்ளது.
கடலூர் நகராட்சி மாநகராட்சியாக வேண்டும் என அனைத்து தரப்பினராலும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், நடந்து முடிந்த முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் உள்ளாட்சி அமைப்புகளான பகுதியில் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பு கடலூர் நகர மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion