மேலும் அறிய

கடலூர்: திருவந்திபுரத்தில் மொட்டையடிப்பதற்காக ஒரே நேரத்தில் 5.000 பேர் குவிந்ததால் பரபரப்பு

’’கொரோனா பரவல் அச்சம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தளங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை’’

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதனால் வார தொடக்க நாட்களில் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும், இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதுமட்டுமின்றி எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இடம் ஆகும், ஆனால் இந்த கொரோனா காலகட்டம் தொடங்கிய முதல் இங்கு பெரிதும் திருமணங்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் திருமணத்திற்காக வேண்டி கொண்டவர்கள் மற்றும் முன்கூட்டியே முடிவு செய்தவர்கள் மட்டும் இங்கே திருமணம் செய்து கொண்டு வந்தனர்.
 
கடலூர்: திருவந்திபுரத்தில் மொட்டையடிப்பதற்காக ஒரே நேரத்தில் 5.000 பேர் குவிந்ததால் பரபரப்பு
 
இந்தநிலையில் தற்பொழுது கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் அச்சம் உள்ளதால் தமிழக அரசே வாரம் மூன்று நாட்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . ஆனால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் திருமணம் செய்வதற்கு இக்கோயிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பலர் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள். தற்போது பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நடைபெறுவதால், கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். 
 
ஆண்டுதோறும் புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமை அன்று கோயிலில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்பதால், அந்த நாட்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த முடியாத நிலை உள்ளது. 
 
கடலூர்: திருவந்திபுரத்தில் மொட்டையடிப்பதற்காக ஒரே நேரத்தில் 5.000 பேர் குவிந்ததால் பரபரப்பு
 
இதனால் புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையன்று கோயிலில் பெருமாளை தரிசிக்க முடியாது என்று எண்ணிய பக்தர்கள் அதிகாலையிலேயே கடலூர் திருவந்திபுரத்திற்கு தேவநாதசுவாமி கோயிலில் மக்கள் வர தொடங்கியதால் அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் பெரும் அளவில் மக்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் காலையில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் இருந்தும் சமுக இடைவெளி இல்லாமல் திரண்ட பொதுமக்கள் மேலும் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் என பலர் முக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி இல்லாமலும் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Embed widget