ரூ.9000 கோடி அதிர்ச்சி ஓயும் முன்...வராத பணத்திற்கு பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுக் கொடுத்த வங்கி!
Kanchipuram : " வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது, வேறு ஒருவரின் வங்கி எண் விவரம் மற்றும் அவரது வங்கி கணக்கு விவரம் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர் "
9000 கோடி ரூபாய் பணம்
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆனதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அது தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது தெரிய வந்தது. கடந்த வாரம் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 105 ரூபாய் இருந்த நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனை அடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ. 21,000 பணம் அனுப்பிய பிறகு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் அலட்சியத்தால் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது