மேலும் அறிய

மகனைப் புதைக்க இடம் தரல.. 'RC'-ஆன்னு கேட்குறாங்க.. உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா? - கதறிய தாய்..

மகனின் உடலை புதைக்கவே படாதபாடுபடுவதாக இறந்த சிறுவனின் தயார் அழுது புலம்பியுள்ளார்

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி மாணவன் பள்ளி வேன் மோதி உயிரிழந்தான். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக 2ம் வகுப்பு படித்த மாணவனின் உயிர் பிரிந்ததாக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இறந்த மகனின் உடலை புதைக்கவே படாதபாடு படுவதாக இறந்த சிறுவனின் தயார் அழுது புலம்பியுள்ளார். கிறிஸ்டியன் என்று சொன்னாலும் சந்தா, ஆர்சி, சிஎஸ் ஐ என தன்னை அலைக்கழிப்பதாக அவர் கோபத்தை கக்கியுள்ளார். 

இது குறித்து பேசிய அவர், ''குழந்தையை புதைக்கலாம் என்று ஒரு சர்ச்சுக்கு போன் செய்தேன். அவர்கள் சந்தா கட்டினால்தான் இடம் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். சிஎஸ்ஐ போன் செய்து கேட்டேன், அவர்கள் மதுரையில் இருந்து சர்ட்டிபிகேட் கேட்கிறார்கள். நான் சிஎஸ்ஐ என்பதை உறுதிப்படுத்த சான்றிதழ் கேட்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் அசிங்கமாகவே இல்லையா? நானும் கிறிஸ்டியன்தான். என் அம்மா இறக்கும்போது பிரார்த்தனை செய்வதற்காக அருகில் உள்ள சர்ச்சுக்கு சென்று வருமாறு அழைத்தேன். நாங்கள் ஆர்சி, நீங்கள் சிஎஸ் ஐ என அவர்கள் சொல்லிவிட்டார்கள். கிறிஸ்டியன் என்பதற்கு சர்டிபிகேட் கேட்டாலும் பரவாயில்லை மதுரை சிஎஸ் ஐ, ஆர்சி என பேசுகிறார்கள். அசிங்கமாகவே இல்லையா இவர்களுக்கு? எதுக்கு சர்ச் நடத்துறீங்க நீங்க எல்லாம்? நானும் பைபிள் படிச்சு இருக்கேன். நானும் கிறிஸ்டியன் தான்..  கிறிஸ்டியன் என்று சொல்லவே அசிங்கமாக இருக்கிறது.சந்தா கட்டுங்கள்.. சந்தா கட்டுங்கள் என்கிறார்கள்.. அசிங்கமாக இருக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால் கேட்ட இடத்தில் புதைக்காவது இடத்தைக் கொடுங்கள்'' என்றார்.

மகனைப் புதைக்க இடம் தரல.. 'RC'-ஆன்னு கேட்குறாங்க.. உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா? - கதறிய தாய்..

முன்னதாக பேசிய அவர், “என்னுடைய மகன் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வேனில் சென்றார். அடுத்த 10 நிமிடங்களில் என் மகனுக்கு விபத்து நடைபெற்றதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது. அத்துடன் ஒரு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தனர். அங்குச் சென்ற பார்த்தபோது அவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்று தெரிவித்தனர். அதன்பின்பு என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்று தெரிவித்தனர். இன்று காலை அவன் வெள்ளை சட்டை அணிந்து சென்றான். அந்தச் சட்டை முழுவதும் இரத்தக்கறை படிந்துள்ளது. 7 வயது மகன் இப்படி இறந்துள்ளது எங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய மகனிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை யாரும் சரியாக தெரிவிக்கவில்லை'' என்றார்

என்ன நடந்தது? 

சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது ஆழ்வார் திருநகர். இந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று காலை இந்தப் பள்ளியில் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரியும் பூங்காவனம் பள்ளி வேனை  ஓட்டிச் சென்றுள்ளார். பூங்காவனம் மாணவன் தீக்‌ஷித் பின்னால் நடந்து வந்ததை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பூங்காவனம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் வேன் மாணவன் தீக்ஷித் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவன் தீக்‌ஷித் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget