லோக்கல் ரயிலில் இளம்பெண் கண் முன்பே சுய இன்பம் செய்த இளைஞர் - வீடியோ எடுத்து வெளியிட்ட சிங்கப்பெண்..!
வீடியோ எடுத்துக்கொண்டே அப்பெண், அந்த இளைஞரை திட்டுகிறார். உடனே அவர் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கப் பார்க்கிறார்
ஓடும் ரயிலில் தனது கண் முன்பே இளைஞர் ஒருவர் சுயஇன்பம் செய்தாக ஊடகத்துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் ஆதாரத்துடன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் பெண்கள் இரவில் தனியாக செல்வது இன்னும் கேள்விகுறியாக இருக்கிறது. நாகரீகமும், விஞ்ஞானமும் நல்ல வளர்ச்சி அடைந்தாலும், பெண்களுக்கான பாதுகாப்பில் நமது நாடு இன்னும் பின்னோக்கியே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் எவ்வளவு வருடங்கள் ஆனாலும், குறைந்தபாடில்லாமல் இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளது. தினமும் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை நடப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக பொதுவான இடத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாமல் இருக்கின்றது.
இந்த நிலையில், பொது இடத்தில் தனக்கு எதிராக நேர்ந்த அசிங்கத்தையும், கொடுமையையும் மீடியாவில் வேலை செய்யும் பெண் ஒருவர் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். புறநகர் ரயிலில் இரவில் பயணித்த அப்பெண் அந்த அசிங்கத்தை சந்தித்துள்ளார்.
கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் பணிபுரியும் அந்த இளம்பெண், புறநகர் ரயிலில் இரவு பெண்கள் பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்தப் பெட்டியில் ஒரு இளைஞர் அப்பெண் முன்பு சுயஇன்பம் செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது செல்போனை எடுத்து அவரின் செயலை வீடியோவாக எடுத்துள்ளார். தான் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த இளைஞர் தெரிந்தே தனது முன்பு சுயஇன்பம் செய்ததாக அப்பெண் கூறினார்.
வீடியோ எடுத்துக்கொண்டே அப்பெண், அந்த இளைஞரை திட்டுகிறார். உடனே அவர் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கப் பார்க்கிறார். தான் போதையில் இருந்ததால், அந்த மாதிரி செய்ததாகவும் அவர் அப்பெண்ணிடம் விளக்கம் கூறுகிறார். ஆனால் அந்த பெண் தைரியத்துடன் திட்டு திட்டு என்று திட்ட... ரயில் வேகம் குறையவே, ஓடும் ரயிலில் இருந்து இறங்கி தப்பித்து செல்கிறார் அந்த நபர்.
பின்னர், ரயில் நிலையத்து வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வீடியோ மூலம் விளக்குகிறார். இரவில் ரயிலில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பெண்கள் பெட்டியில் ஒரு பாதுகாவலர் ஆவது இருக்க வேண்டும் என்றும், பேருந்தில் சிசிடிவி இருப்பது போல ரயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார்.
இதுதொடர்பான போலீசார் நடவடிக்கை அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி கலாட்டா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்