மேலும் அறிய

Chennai Wonderla: எல்லோரும் ஓரம் போங்க.. லண்டனுக்கு டப் கொடுக்கும் சென்னை வொண்டர்லா.. டிசம்பரில் இன்ப அதிர்ச்சி..!

Chennai Wonderla Amusement Park: சென்னை புறநகர் பகுதியில் அமைய உள்ள முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக, சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Wonderla Theme Park : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, தமிழ்நாட்டின் முதல் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது.

இந்தியாவில் வொண்டர்லா தீம் பார்க் (Wonderla Amusement Park)  

சமீப காலமாக பொதுமக்களுக்கு, சுற்றுலா மீது அதிக அளவு ஆர்வம் ஏற்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகளுடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று, வருவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதியில், பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கோடைகாலம் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தினமும் படையெடுத்து வருகின்றனர். 

வெளிநாடுகளில் பொழுதுபோக்கு பூங்கா கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு மக்களிடம் இருக்கும் பெரும் ஆதரவு, பல கோடி ரூபாயை முதலீடு செய்ய நிறுவனங்களை தூண்டுகிறது. அந்த வகையில், இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா (Wonderla Amusement Park) தீம் பார்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர். 

சென்னையில் வொண்டர்லா தீம் பார்க்

பெங்களூரில் இருக்கும் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையில் அந்த நிறுவனம் இறங்கியது. இதற்காக தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. தொடர்ந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 

தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, வொண்டர்லா பூங்கா தொடர்பான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதற்குப் பின்னணியில் நிர்வாக சிக்கல் காரணம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. 

சுற்றுலாத்துறையில் நடைபெற்ற மாற்றம்

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் அமைக்கும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி அனுமதி வழங்கப்படும் என கொள்கையை அறிவித்திருந்தது. 

அதன் அடிப்படையில், டிஸ்னி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ போன்ற உலக அளவில் இருக்கும் மிக முன்னணி, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்களை சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா மீண்டும் புத்துயிர் பெற்றது. தொடர்ந்து உடனடியாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

சென்னை வொண்டர்லா எங்கு அமைகிறது ? Chennai Wonderla Theme Park Location

வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் கிளையை தொடங்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster

வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில், மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் 80 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழா எப்போது ? Chennai Wonderla Theme Park Opening Date 

தற்போது இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான இறுதி கட்டப் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணி வெற்றிகரமாக முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய சூழலைப் பொறுத்தவரை 70 சதவீத பணிகள் முழுமை அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் விடுமுறை நாட்களின்போது, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி திறப்பதற்கான அனைத்து கூறுகளும் இருப்பதாக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
Bribe complaint WhatsApp number: லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget