Chennai Fog: சென்னையை சூழப் போகும் பனிமூட்டம்: வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குளிர் நிலவரம் நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, இன்று 04-01-20251 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாளை காலை (05-01-20232) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியலை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 முதல் 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை நிலவரம்:
இந்த தருணத்தில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
04-01:2025 மற்றும் 05-01-2025:
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
06-01-2025:
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
07:01:2025:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
08-01-2025:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மகனும் காரைக்கால் பகுதிகளிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-01-2025:
வார தமிழகத்தில் அநேக இடங்களிலும், பதுலை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10:01:2025
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்